காணாமல் போன மலைகள் எல்லாம் 320 கோடி ஆண்டுகள் பழைமையானது - கனிம வளத்துறை அமைச்சர் பிரபு
தமிழகம் முழுவதும் எத்தனை மலைகள், குன்றுகள் சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்பட்டது என பட்டியலிட்ட அமைச்சர் பிரபு. காணாமல் போன மலைகள் என்ற தலைப்பில் புகைப்படத்துடன் அறிவிப்பை வெளியிட்டு பேச்சு. பெரம்பலூர் , மதுரை , திருப்பத்தூர் , கோவை , தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் காணாமல் போன மலைகள் - அமைச்சர் பிரபு காணாமல் போன மலைகள் எல்லாம் 320 கோடி ஆண்டுகள் பழைமையானது - கனிம வளத்துறை அமைச்சர் பிரபு ஆற்று மணலுக்கு மாற்றான எம்-சாண்டால் பல மலைகள் காணாமல் போயின - அமைச்சர் பிரபு

தமிழகத்தில் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட மலைகள் மற்றும் குன்றுகள் குறித்த பட்டியலை கனிம வளத்துறை அமைச்சர் பிரபு புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார். பெரம்பலூர், மதுரை, திருப்பத்தூர், கோவை மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இத்தகைய மலைகள் காணாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆற்று மணலுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் எம்-சாண்ட் தயாரிப்பிற்காக இந்த மலைகள் அழிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். காணாமல் போன இந்த மலைகள் அனைத்தும் சுமார் 320 கோடி ஆண்டுகள் பழமையானவை என்று அவர் தெரிவித்தார்.