ஆண்டுக்கு ரூ.90 லட்சம் சம்பளம்... ஆனா எனக்கு இந்த வேல வேண்டாம்; இளைஞர் சொன்ன காரணம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க
இன்றைய போட்டி நிறைந்த உலகில், நல்ல சம்பளத்துடன் ஒரு வேலை கிடைத்தாலே போதும் என்றுதான் பெரும்பாலானோர் கருதுகிறார்கள். ஆனால், ஆண்டிற்கு ரூ.90 லட்சம் தருவதாகக் கூறிய ஒரு உயர் பதவியை, ஒரு நபர் மிகச் சாதாரணமாக நிராகரித்துள்ளார். காரணம், சம்பளம் குறைவு என்பதால் அல்ல; மாறாகத் தான் யாருக்குக் கீழே பணியாற்றப் போகிறோமோ, அந்த மேலாளரின் அணுகுமுறை அவருக்குப் பிடிக்கவில்லையாம். இந்தச் சுவாரஸ்யமான சம்பவத்தை மனிதவள ஆலோசகரான (HR Consultant) மனோஜ் குமார் தனது லிங்க்ட்இன் (LinkedIn) பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நைட்டுல வேற லெவல்... ஆனா பகல்ல செம பக்தி; இந்த தேவதையின் நகரத்தில இத மட்டும் பண்ணிறாதீங்க இந்தியர்களே வார கணக்கில் நடந்த தேடல்... எதிர்பாராத திருப்பம் மனோஜ் குமார் தனது பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது, ஒரு நிறுவனத்தின் உயர்பதவிக்காகப் பல கட்ட நேர்காணல்களுக்குப் பிறகு, தகுதியான ஒரு நபர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு ஆண்டிற்கு ரூ.90 லட்சம் சம்பளத் தொகுப்பும் ஆஃபர் செய்யப்பட்டது. அனைத்தும் சுமுகமாக முடிந்துவிட்டது, அந்த நபர் வேலையில் சேர்ந்துவிடுவார் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், திடீரென அந்த வாய்ப்பை ஏற்றுக்கூற மறுத்த அவர், "இந்த வேலை வாய்ப்பு மற்றும் சம்பளம் மிகவும் அற்புதமானதுதான். ஆனால், நான் பணியாற்ற வேண்டிய மேலாளருடன் எனக்குக் செட் ஆகாது. அதனால் இந்த வேலையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறி அதிர்ச்சி அளித்துள்ளார். சம்பளத்தை விட மன அமைதியே முக்கியம் முதலில் இந்த பதிலைக் கேட்டு வியப்படைந்த மனோஜ் குமார், பின்னர் அந்த நபர் எடுத்த முடிவின் ஆழமான அர்த்தத்தைப் புரிந்து கொண்டார். "ஊழியர்கள் நிறுவனங்களை மட்டும் தேர்வு செய்வதில்லை, தங்களுக்குத் தலைமை தாங்கும் நபர்களையும் சேர்த்துதான் தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு பெரிய சம்பளம் ஒருவரை வேலையில் சேர வைக்கலாம். ஆனால் ஒரு நல்ல மேலாளர் மட்டுமே அவரை அந்த வேலையில் தொடர்ந்து நீடிக்க வைப்பார்" என்று மனோஜ் குமார் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இணையவாசிகளின் அதிரடி ஆதரவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்தப் பதிவிற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். "பணம் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம், ஆனால் மன அமைதிதான் உடலுக்கும் மனதுக்கும் நல்லது. இப்போதெல்லாம் ஊழியர்கள் பணத்தை விட நிம்மதிக்கே முன்னுரிமை தருகிறார்கள்" என ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார். "சிறந்த தலைவர்களே நிறுவனத்தை உயர்த்துகிறார்கள். ஊழியர்களின் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் சந்தேகப்பட்டு நுணுக்கமாகக் கண்காணிக்கும் மேலாளர்களால்தான் திறமையான மனிதர்கள் வேலையை விட்டு வெளியேறுகிறார்கள்" எனப் பலரும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

The Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →