PulseNews
வணிகம்

சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்..

சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சாலைகளை உடனடியாகச் சீரமைக்கும் பணிகளுக்கு மண்டலத்திற்கு ஒரு கோடி ரூபாய் முதல் ஒரு கோடியே 25 லட்சம் வரை ரூபாய் வரை என 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பருவமழை தொடர்பான பணிகளுக்காகக் கூடுதலாக வார்டுக்கு 5பணியாளர்கள் வீதம் 1,000 பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மின்சாரம் மற்றும் இயந்திரம் சார்ந்த உபகரணங்களைப் பழுதுபார்ப்பதற்கு 15 லட்சம் ரூபாயும் தேங்கும் மழை நீரை அகற்ற அதிக திறன் கொண்ட 150 மோட்டார்கள் மற்றும் டிராக்டர் மூலம் இயக்கப்படும் 600 மோட்டார்களை வாடகைக்கு அமர்த்த அனுமதி வழங்கியும் உத்தரவிட்டுள்ளது. மேலும் ,இப்பணிகளை ஆய்வு செய்ய 15 மண்டலங்களுக்கும் நோடல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Polimer News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்..
PulseNews சுருக்கம்

சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக 10 கோடி ரூபாயை மாநகராட்சி ஒதுக்கியுள்ளது. மேலும், சேதமடைந்த சாலைகளை உடனடியாகச் சீரமைக்கும் பணிகளுக்காக, ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா 1 கோடி முதல் 1.25 கோடி ரூபாய் வரை என மொத்தம் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பருவமழை காலப் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில், வார்டு ஒன்றுக்கு கூடுதலாக 5 பேர் வீதம் மொத்தம் 1,000 பணியாளர்களை நியமிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அத்துடன் மின்சாரம் மற்றும் இயந்திரங்கள் தொடர்பான பழுதுபார்க்கும் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business