Tasmc shop holiday : தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு லீவு.! குடிமகன்களுக்கு அலர்ட்.! வெளியான முக்கிய அறிவிப்பு

டாஸ்மாக்- மதுபான விற்பனை

தமிழகத்தில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகள் மூலம் தினமும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டப்படுகிறது. அதிலும் பண்டிகை காலங்களில் வெளியாகும் திரைப்படங்களில் மொத்த வசூலை ஒரே நாளில் வாரி சுருட்டி விடும். அந்த அளவிற்கு மதுபானம் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனிடையே மதுப்பழக்கத்தை குறைக்க பல விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு வருகிறது.

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

இதனிடையே டாஸ்மாக் கடைகளுக்கு வார விடுமுறையோ, தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என விடுமுறை பண்டிகை நாட்களிலும் விடுமுறை விடப்படுவது இல்லை. அதே நேரம், ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு நாள், திருவள்ளுவர் நாள்,மீலாது நபி நாள்சுதந்திர நாள் (ஆகஸ்ட் 15), மே தினம் (மே 1) காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), ஆகிய நாட்களில் விடுமுறை அறிவிக்கப்படும், மேலும் கோயில், மசூதி, தேவாலய திருவிழாக்கள் நேரத்திலும் டாஸ்மாக் கடைகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படும். இந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி மிலாது நபி பண்டிகையையொட்டி நாளைய தினம் டாஸ்மாக் கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மிலாது நபி- டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 26.08.2026 (புதன்கிழமை) அன்று மிலாதுன்நபி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 2511(a) ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள்,

மதுபான கடைகள், பார்களுக்கு விடுமுறை

FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A)/FL3-(AA) முதல் FL11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையங்கள்/மதுபான கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு 26.08.2026 (புதன்கிழமை) அன்று மிலாதுன்நபி தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது.

தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார். இதே போல தமிழகம் முழுவதும் அந்த அந்த மாவட்ட ஆட்சியர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மதுபான விற்பனை தொடர்பாக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாளொன்றுக்கு நூறு கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் கிடைப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.