தனியார் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டால் நடவடிக்கை..! - அமைச்சர் பார்த்திபன்
தனியார் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் பேரவையில் தெரிவித்தார். பட்ஜெட் மீதான பொது விவாதத்தின் போது உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், டீசல் விலை உயர்வு காரணமாக தனியார் பேருந்து கட்டணத்தை உயர்த்த அதன் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளதாகவும், இதுகுறித்து உரிய ஆலோசனைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தனியார் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் பார்த்திபன் சட்டமன்றத்தில் தெரிவித்தார். இதற்காக அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
டீசல் விலை உயர்வு காரணமாக பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளதாகவும், இது குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் பதிலளித்தார்.