PulseNews
வணிகம்

“வேண்டும் டாஸ்மாக், வேண்டும்” - சி.வி. சண்முகம் முன்பு மதுப்பிரியர்கள் முழக்கம்!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள நடுவனந்தல் கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக அங்கு சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாகவும், அதற்காக மூன்று நாட்கள் அவகாசம் தருமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “அதிகாரிகளிடம் சொல்லியிருக்கிறேன். அவர்களும் கடையை அகற்றுவதாக சொல்லியிருக்காங்க. அதுக்குதான் சரி, ஒரு ரெண்டு நாள் டைம் கொடுத்துட்டு, ஒரு மூணு நாள் கழிச்சு பார்க்கலாம் அப்படின்னு நினைச்சேன். அதுக்கப்புறம் எல்லாரும் வந்துட்டாங்கனுதான் வந்தேன். ஒன்னு, ரெண்டு, மூணு நாள் பார்ப்போம்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து, சி.வி. சண்முகம் அங்கிருந்த பொதுமக்களிடம் பேசிவிட்டு காரில் ஏறுவதற்குள், டாஸ்மாக் கடை முன்பு நின்றிருந்த மதுப்பிரியர்கள் “வேண்டும் டாஸ்மாக், வேண்டும் டாஸ்மாக்” என முழக்கமிட்டனர். மேலும், “சாகும் வரை குடிப்போம்”, “கடன் வாங்கி குடிப்போம்” என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். இருப்பினும், இதனைப் பொருட்படுத்தாமல் சி.வி. சண்முகமும், அவரது ஆதரவாளர்களும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அதன் பின்னர் அங்கு இருந்த போலீசார் மதுப்பிரியர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை சி.வி. சண்முகம் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது, மதுப்பிரியர்கள் “வேண்டும் டாஸ்மாக், வேண்டும்” என முழக்கமிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“வேண்டும் டாஸ்மாக், வேண்டும்” - சி.வி. சண்முகம் முன்பு மதுப்பிரியர்கள் முழக்கம்!
PulseNews சுருக்கம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள நடுவனந்தல் கிராமத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்யச் சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம், கடைக்கு ஆதரவாக மதுப்பிரியர்கள் சிலர் முழக்கங்களை எழுப்பினர்.

பொதுமக்களிடம் பேசிய சி.வி.சண்முகம், அதிகாரிகளிடம் இது குறித்துப் பேசியுள்ளதாகவும், கடையை அகற்றுவதாக அவர்கள் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார். எனவே, இது தொடர்பான நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் மூன்று நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#business