இந்த ஆண்டில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன்படி, ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 27 ஆம் திகதி வரை இலங்கைக்கு 1,517,296 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 173,878 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இந்தியாவிலிருந்து அதிக...

2026 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 இலட்சத்தை கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. ஜனவரி 1 முதல் ஓகஸ்ட் 27 வரையான காலப்பகுதியில் மொத்தம் 1,517,296 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
ஓகஸ்ட் மாதத்தின் முதல் 27 நாட்களில் மட்டும் 173,878 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இதில் இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.