Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று காலை அதிரடியாக குறைந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்த நிலையில், மாலையில் அதிரடியாக விலை உயர்ந்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மாலையில் தங்கம் ஒரு சவரனுக்கு 1,280 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை நிலவரத்தை இப்போது பார்க்கலாம்.

ஏறி இறங்கும் தங்கம் விலை

ஆகஸ்ட் 10-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் குறைந்து 13,950 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 111,600 ரூபாய்க்கு விற்பனை.

ஆகஸ்ட் 11-ம் தேதி காலையில் அதிகரித்த தங்கம் விலை, மாலையில் குறைந்தது. அந்த வகையில், ஒரு கிராம் 14,150 ரூபாய்க்கும், சவரன் 1,13,200 ரூபாய்க்கும் விற்பனை.

ஆகஸ்ட் 12-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் உயர்ந்து 14,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 1,13,600 ரூபாய்க்கு விற்பனை.

ஆகஸ்ட் 13-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் உயர்ந்து 14,220 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 1,13,760 ரூபாய்க்கு விற்பனை.

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று காலையில் குறைந்து நகைப்பிரியர்களை குஷியில் ஆழ்த்தியது. அந்த வகையில், இன்று காலை கிராம் ஒன்றுக்கு 180 ரூபாய் குறைந்து 14,040 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,440 ரூபாய் குறைந்து 1 லட்சத்து 12 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், மாலையில் கிராம் ஒன்றிற்கு 160 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,280 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,13,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை

இதனிடையே, இன்று மாலையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இன்று காலையில் வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 255 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அதே விலையில் தொடர்கிறது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று காலை குறைந்து காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை, மாலையில் திடீரென அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மாலைய நிலவரப்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை 1,280 ரூபாய் அதிகரித்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய தற்போதைய விலை நிலவரங்களை இந்த தொகுப்பில் விரிவாகக் காணலாம்.