PulseNews
வணிகம்

மேட்டூர் அணை நீரைத் திறந்து வைத்த முதல்வர் விஜய்; மலர் தூவி மரியாதை!

காவிரி படுகை பாசனத்திற்காக சேலம் மேட்டூர் அணையை முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார். காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயப் பாசனத்திற்கான முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணையில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதத் தொடக்கத்தில் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால், குறிப்பிட்ட தேதியில் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க முடியாத சூழல் நிலவி வந்தது. இதனால் டெல்டா பகுதி விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய முடியாமல் கவலையில் ஆழ்ந்திருந்தனர். தொடர் நீர்வரத்து காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்து தற்போது 90 அடியை எட்டியுள்ளதைத் தொடர்ந்து, காவிரி டெல்டா பாசனத்திற்காக முதல்வர் விஜய் இன்று (01-09-26) சேலத்திற்குச் சென்று மேட்டூர் அணையை திறந்து வைத்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் விமான நிலையம் சென்ற முதல்வர் விஜய், சாலை மார்க்கமாக பூசாரிப்பட்டி பிரிவு, ஜோடுகுளி, வள்ளையூர்கோட்டை, தீவட்டிப்பட்டி, மேச்சேரிக்கு திறந்த வெளி வாகனத்தில் ரோடு ஷோ நடத்தினார். அப்போது வழியெங்கும் அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அதனை தொடர்ந்து மேட்டூருக்குச் சென்று மேட்டூர் அணையை முதல்வர் விஜய் நீருக்கு பூக்களை தூவி திறந்து வைத்தார். மேட்டூர் நீரால் காவிரி படுகையில் உள்ள 13 மாவட்டங்களில் சுமார் 17 லட்சம் ஏக்கரில் பயிர சாகுபடி செய்யப்படும் சூழ்நிலையில், முதற்கட்டமாக 3,000 கன அடி நீரை முதல்வர் விஜய் அணையை திறந்து வைத்துள்ளார். இதையடுத்து இன்று முதல் 45 நாட்களுக்கு அணையில் இருந்து நீர் திறக்கப்படவுள்ளது. அணை நீரை திறந்து வைத்த பிறகு, அணை பாசன விவரங்களை அதிகாரிகளிடம் முதல்வர் விஜய் கேட்டறிந்தார்.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மேட்டூர் அணை நீரைத் திறந்து வைத்த முதல்வர் விஜய்; மலர் தூவி மரியாதை!
PulseNews சுருக்கம்

காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சேலம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக முதலமைச்சர் விஜய் இன்று நீரைத் திறந்து வைத்தார். அணையின் நீர்ப் பகுதியில் மலர்களைத் தூவி அவர் மரியாதை செலுத்தினார்.

வழக்கமாக ஜூன் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்காக அணை திறக்கப்படுவது வழக்கம். இருப்பினும், இந்த ஆண்டு ஜூன் மாதத் தொடக்கத்தில் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், குறிப்பிட்ட தேதியில் தண்ணீரைத் திறக்க முடியாத சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#business