PulseNews
வணிகம்

வருவாயை அதிகரிக்க ஆலோசனை; முதல்வர் விஜயை சந்தித்த மாண்டேக் சிங் அலுவாலியா குழு!

தமிழகத்தின் வரி மற்றும் வரி அல்லாத வருவாயை அதிகரிப்பதற்கான செயல்திட்டத்தை வகுப்பதற்காக மூத்த பொருளாதார நிபுணரும், திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவருமான மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவை தமிழக முதல்வர் விஜய் ஏற்கெனவே நியமித்திருந்தார். இந்த குழு, தமிழகத்தில் வரி மற்றும் வரி அல்லாத வருவாயை அதிகரிப்பதற்கான ஆய்வுகளை ஆராய்ச்சி செய்து அதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்து மூன்று மாதத்தில் தமிழக அரசிடம் வழங்கும். அதே போல், டாஸ்மாக் துறைகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், தமிழகத்தில் எந்தெந்த துறைகளில் லீக்கேஜ் இருப்பதை கண்டறிந்து அந்த துறைகளை சரி செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள அறிக்கையை தயார் செய்து கொடுப்பது தான் இந்த குழுவின் பணியாகும். அதன்படி, இந்த குழுவினர் கேட்கும் விவரங்களை ஒவ்வொரி துறையும் விரைந்து உடனடியாக வழங்க வேண்டும் என்று துறை ரீதியான அதிகாரிகளுக்கு ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் விஜய்யை, மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான குழுவினர் இன்று (13-08-26) சந்தித்துப் பேசினர். அதில் தமிழகத்தின் வரி மற்றும் வரி அல்லாத வருவாயை அதிகரிப்பதற்கான செயல்திட்டத்தை வகுக்க ஆலோசனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் உடன் இருந்தார்.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
வருவாயை அதிகரிக்க ஆலோசனை; முதல்வர் விஜயை சந்தித்த மாண்டேக் சிங் அலுவாலியா குழு!
PulseNews சுருக்கம்

தமிழகத்தின் வரி மற்றும் வரி அல்லாத வருவாயை உயர்த்துவதற்கான வழிமுறைகளை கண்டறிய, முன்னாள் திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவை முதல்வர் விஜய் நியமித்துள்ளார். இக்குழுவினர் மாநிலத்தின் நிதி ஆதாரங்களை பெருக்குவது குறித்தும், டாஸ்மாக் துறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்தும் ஆய்வு செய்ய உள்ளனர்.

தங்கள் ஆய்வுகளை முடித்து, வருவாயை அதிகரிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை அடுத்த மூன்று மாதங்களுக்குள் தமிழக அரசிடம் இந்த குழுவினர் சமர்ப்பிக்க உள்ளனர். இந்த முக்கிய ஆலோசனை கூட்டம் முதல்வர் விஜயுடன் நடைபெற்றுள்ளது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#business