PulseNews
வணிகம்

Kanchipuram Vandavasi 4-Lane Expressway: காஞ்சிபுரம் - வந்தவாசி மக்களுக்கு மெகா குட் நியூஸ்! இனி டிராஃபிக் பிரச்சனையே இருக்காது! அரசின் மாஸ் திட்டம்..

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் முக்கியத் திட்டம், முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் (CMRDP) கீழ் தற்போது மிக வேகமாக நடைபெற்று வருகிறது. செய்யாறு மற்றும் வெம்பாக்கம் பகுதிகளில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பேட்டைகளின் அபாரமான தொழில் வளர்ச்சியை மனதில்கொண்டு இந்தச் சாலை அகலப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்தச் சாலை மானம்பாதியில் சென்னை புறவெளி வட்டச் சாலையுடன் (CPRR) இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம், தென் மாவட்டங்கள் மற்றும் தொழிற்பேட்டைகளில் இருந்து சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களுக்குச் செல்லும் சரக்கு வாகனங்கள் எந்தவிதமான போக்குவரத்தும் இன்றி தடையின்றி விரைவாகச் சென்று சேர வழிவகை ஏற்படும்.

தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்த போக்குவரத்து நெரிசல்

செய்யாறு மற்றும் வெம்பாக்கம் சிப்காட் பகுதிகள் வட தமிழகத்தின் முக்கியத் தொழில் மண்டலங்களாக உருவெடுத்து வருகின்றன. இருப்பினும், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் நிலவி வந்த கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாகத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களைக் கொண்டு வருவதிலும், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களைத் துறைமுகங்களுக்கும் பிற இடங்களுக்கும் கொண்டு செல்வதிலும் பெரும் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

அதுமட்டுமன்றி, குறுகலான சாலையில் அடிக்கடி நேரிட்ட விபத்துகள், தொழிலாளர்கள் சரியான நேரத்திற்குப் பணிக்குச் செல்ல முடியாத நிலை போன்ற பல்வேறு சவால்கள் நிலவின. இதனால் தொழிலதிபர்கள், தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்ற வேண்டும் என்று நீண்டகால கோரிக்கை விடுத்து வந்தனர்.

நான்கு கட்டங்களாக நடைபெறும் விரிவாக்கப் பணிகள்

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, இந்தச் சாலை விரிவாக்கப் பணிகள் மொத்தம் நான்கு கட்டங்களாகத் திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் முதல் கட்டமாக, மங்கலம் முதல் மானம்பாதி சந்திப்பு வரையிலான 9 கிலோமீட்டர் தொலைவுள்ள சாலை ரூ. 78 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் தற்போதைய இருவழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றுவதுடன், தேவையான இடங்களில் சிறிய பாலங்கள் மற்றும் மதகுகளைப் புதிதாகக் கட்டுதல் அல்லது விரிவாக்கம் செய்தல் போன்ற பணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் சாலைகளில் நீர் தேங்குவதைத் தவிர்க்கும் வகையில், குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைப்புகளும் சிறப்பாக உருவாக்கப்பட்டு வருகின்றன.

நில எடுப்பு மற்றும் இரண்டாம் கட்டத் திட்டங்கள்

திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, செய்யாறு சிப்காட் அருகிலுள்ள மானம்பாதியிலிருந்து திருவண்ணாமலை வரையிலான 72 கிலோமீட்டர் தொலைவுள்ள சாலையை அகலப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தொடக்கத்தில் இந்த விரிவாக்கம் வந்தவாசி வரை மட்டுமே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பிற்காலத்தில் இதனைப் விரிவான பொருளாதாரச் சாலை பிணையத்துடன் (Economic Corridor) இணைக்கும் நோக்கில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டது.

செய்யாறு சாலையை ஓரகடம் தொழிற்பேட்டையுடன் இணைப்பதன் மூலம் சென்னையைச் சுற்றியுள்ள தொழில் மண்டலங்களும் செய்யாறு சிப்காட்டும் ஒன்றிணைக்கப்பட்டு, வட தமிழகத்தில் மிகப்பெரிய தொழில் இணைப்புச் சாலை உருவாகும்.

இந்த இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்காக வந்தவாசியில் 14 கிராமங்கள், செய்யாறில் 7, கீழ்பென்னாத்தூரில் 8 மற்றும் திருவண்ணாமலையில் 5 கிராமங்கள் என மொத்தம் 34 கிராமங்களில் உள்ள சுமார் 307 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

வருவாய்த் துறை மூலம் நிலத்தின் மதிப்பு நிர்ணயிக்கப்பட்ட பிறகு இதற்கான முதன்மை கட்டுமான டெண்டர்கள் கோரப்பட உள்ளன. இந்த இரண்டாம் கட்டச் சாலையில் மையத் தடுப்புகள் (Center medians), பேருந்துகள் ஒதுங்கிச் செல்லும் பகுதிகள் (Bus lay-by zones) மற்றும் சீரான வடிகால் வசதிகள் அமைக்கப்படவுள்ளன.

மேம்பாலத் திட்டம் மற்றும் எதிர்பார்க்கப்படும் பயன்கள்

காஞ்சிபுரம் நகருக்குள் நுழையும் பகுதியில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், செவிலிமேடு பாலத்தின் அருகே ஒரு புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலப் பணிகள் 2028-ஆம் ஆண்டிற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்துக் கட்ட விரிவாக்கப் பணிகளும் முழுமையாக முடிவடையும் போது, இச்சாலை ஒரு அதிவேக இணைப்பாக மாறி, திருவண்ணாமலை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து சென்னைத் துறைமுகத்திற்குப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு ஒரு வேகமான, நம்பகமான பாதையாக அமையும். இது காஞ்சிபுரம் பகுதிக்கு வரும் பக்தர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் போக்குவரத்துச் சிக்கலற்ற பயணத்தை வழங்குவதோடு, ஒட்டுமொத்தப் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பக்கபலமாக இருக்கும்.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Kanchipuram Vandavasi 4-Lane Expressway: காஞ்சிபுரம் - வந்தவாசி மக்களுக்கு மெகா குட் நியூஸ்! இனி டிராஃபிக் பிரச்சனையே இருக்காது! அரசின் மாஸ் திட்டம்..
PulseNews சுருக்கம்

காஞ்சிபுரம் மற்றும் வந்தவாசி இடையிலான சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள், முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தற்போது விரைவாக நடைபெற்று வருகின்றன. செய்யாறு மற்றும் வெம்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டைகளின் அசுர வளர்ச்சியை கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தச் சாலை விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மானம்பாதியில் சென்னை புறவெளி வட்டச் சாலையுடன் இந்த வழித்தடம் இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம் இப்பகுதிகளில் நிலவும் போக்குவரத்து சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business