திருநெல்வேலி - திருச்செந்தூர் பகுதியில் ரயில்சேவை மாபெரும் வளர்ச்சிப் பணிகள்: பயணிகள் மகிழ்ச்சி !

தெற்கு ரயில்வேயில் மாபெரும் வளர்ச்சிப் பணிகள்: பயணிகளுக்குப் பலன்!

ரயில் நிலையங்களிலும் நடைமேடை நீட்டிப்பு பணி

"திருநெல்வேலி - திருச்செந்தூர் பகுதியில் அனைத்து ரயில் நிலையங்களிலும் 24 ரயில் பெட்டிகள் நிறுத்தும் வகையில் நடைமேடை கள் நீட்டிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 19 ரயில் நிலையங்களிலும் நடைமேடை நீட்டிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது 3 ரயில் நிலையங்களில் நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மேலும் 8 ரயில் நிலையங்களில் நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது 2 ரயில் நிலையங்களில் கூடுதல் நடை மேடை மேற்கூரை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மேலும் 25 ரயில் நிலையங்களில் கூடுதல் நடை மேடை மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் மின் தூக்கி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விருதுநகர் ரயில் நிலையத்தில் 4 குளிர் குடிநீர் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 14 ரயில் நிலையங்களில் குளிர் குடிநீர் இயந்திரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ராஜபாளையம் - சங்கரன் கோவில் இடையே சோழபுரம் மற்றும் கரிவலம்வந்தநல்லூர் ஆகிய இரண்டு புதிய ரயில் நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளது. கடந்த நான்கு மாதங்களில் சரக்கு ரயில்கள் மூலம் 9.91 லட்சம் டன் சரக்குகள் கையாளப் பட்டுள்ளது.

டால்மியா சிமெண்ட் நிறுவனம்

மேலும் சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில் கோவில்பட்டி நள்ளி ரயில் நிலையம் அருகே டால்மியா சிமெண்ட் நிறுவனத்திற்கு தனி சரக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. ரயில்களை பாதுகாப்பாக இயக்க 22 கிலோமீட்டர் நீளத்திற்கு ரயில் பாதை புதிய தண்டவாளங்களால புதுப்பிக்கப்பட்டுள்ளன. 5.39 கிமீ நீள ரயில் பாதையில் சரளை கற்களில் தூசி சலிக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளது. 49 ரயில் பாதை வளைவுகள் சரிசெய்யப்பட்டுள்ளன. 20 கிமீ நீள ரயில் பாதை இணைப்புகள் சரி செய்யப்பட்டுள்ளன. மதுரை - திருச்சி பகுதியில் 38 ரயில் பாதை இணைப்புகள் சரி செய்யப்பட்டுள்ளன.

ஏழு சிறு பாலங்கள்

திருநெல்வேலி மணியாச்சி பிரிவில் ஏழு சிறு பாலங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. வரும் காலத்தில் 12 சாலை மேம்பாலங்கள் அமைய உள்ளன. அதில் இரண்டு பாலங்கள் இந்த ஆண்டு பணிகள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 சுரங்கப்பாதைகளும் அமைக்கப்பட இருக்கின்றன. 9 ரயில்வே கேட்டுகள் சைகை கம்ப பாதுகாப்போடு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 51 ரயில்வே கேட்டுகளில் சைகை கம்ப பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில்வே கேட்டுகளில் கண்காணிப்பு கேமரா வசதியும் அமைக்கப்பட்டு வருகிறது.

100 புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

ரயில்வே சொத்துக்களை திருடிய 37 பேர் ரயில்வே பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. ரயில்வே சட்ட விதிகளை மீறிய 3,165 பேருக்கு நீதிமன்றத் தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது. சிறை தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிக்கும் ஜன விஸ்வாஸ் சட்டப்படி 1,968 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் ஆதரவற்று சுற்றித் திரிந்த 49 குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோருடன் இணைத்து வைக்கப்பட்டனர். 16 போட்டித் தேர்வுகள் மூலம் 272 ரயில்வே ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே தேர்வாணையம் மூலம் 197 பேருக்கும், பணியில் இருக்கும் போது உயிரிழந்த 10 ரயில்வே ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. கட்டிடங்களை பராமரிக்கும் முதுநிலை பிரிவு பொறியாளர்களுக்கு திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. ரயில்வே ஊழியர்களுக்கு 16 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 100 புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன" - எனவும் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையிலான வழித்தடத்தில் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன்படி, அந்தப் பாதையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் 24 ரயில் பெட்டிகளை நிறுத்தும் வகையில் நடைமேடைகளை நீட்டிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மொத்தம் 19 ரயில் நிலையங்களில் இந்த நடைமேடை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த வழித்தடத்தில் மூன்று ரயில் நிலையங்களில் புதிய நடை மேம்பாலங்கள் அமைக்கும் பணிகளும் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.