PulseNews
வணிகம்

'கடைகளை மூடிவிட்டு கலெக்ஷனை உயர்த்த பிளானா?'- 'வெற்றி தமிழ்நாடு' குறித்து வல்லம் பஷீர் விமர்சனம்

தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டதாக அரசு செய்யும் விளம்பரங்கள் அனைத்தும் அப்பட்டமான பொய் என்றும், மறைமுகமாக மது விற்பனையை அதிகரித்து வருவாய் ஈட்டுவதிலேயே அரசு குறியாக உள்ளது என்றும் வல்லம் பஷீர் விவரித்துள்ளார். நக்கீரன் டிவிக்கு அரசியல் விமர்சகர் வல்லம் பஷீர் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில் "அரசு 700-க்கும் மேற்பட்ட மதுக்கடைகளை முற்றிலும் மூடிவிட்டதாகப் பேருந்து நிலையங்கள் தோறும், மக்கள் கூடும் இடங்கள் தோறும் முதலமைச்சர் சிரிப்பது போன்ற பிரம்மாண்ட புகைப்படங்களை வைத்து 'வெற்றி தமிழ்நாடு' என்று அரசுப் பணத்தில் விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர், பள்ளி மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இன்னும் மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கடைகளின் பட்டியலை, அதன் அட்ரஸ் மற்றும் லொகேஷனோடு சட்டமன்றத்திலேயே ஆதாரமாக வாசித்துக் காட்டுகிறார். இதற்கு இந்த அரசிடம் என்ன பதில் இருக்கிறது? எந்தப் பதிலும் இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஒரு குறிப்பிட்ட டாஸ்மாக் கடை மூடப்பட்டதாகச் சமூக வலைத்தளங்களில் ஆளும் தரப்பினரால் ஒரு வீடியோ செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் அந்த இடத்திற்கு நேரில் சென்று அங்குள்ள பொதுமக்கள் மற்றும் பக்கத்து கடைக்காரர்களிடம் விசாரித்தபோது, 'அப்படி ஒரு கடையே இங்கு இருந்ததில்லை, இது ஒரு தனியார் கட்டுமானப் பகுதி' என்று அப்பட்டமான உண்மையை உடைக்கிறார்கள். மறுபுறம், கடைகளைக் குறைத்துவிட்டோம் என்று நாடகமாடிக் கொண்டே, தமிழக அரசின் நிதித்துறை செயலாளர், 'அடுத்த ஆண்டு டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசுக்கு இத்தனை ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் வரும் என எதிர்பார்க்கிறோம்' என்று இலக்கு நிர்ணயித்துப் பேசுகிறார். கடைகளைக் குறைத்தால் வருவாய் எப்படி அதிகமாகும்? அப்படியென்றால், இருக்கும்கடைகளில் கூடுதல் குடிமகன்களை உருவாக்குகிற திட்டத்திற்குத் தான் இவர்கள் 'வெற்றி தமிழ்நாடு' என்று பெயர் வைத்துள்ளார்களா? அதுமட்டுமின்றி, இப்போது ஆன்லைன் மூலமாகவும் மதுப் பாட்டில்களைப் பதிவு செய்து வாங்கும் புதிய நடைமுறையைக் கொண்டு வந்துள்ளார்கள். பொய்யை மட்டுமே மூலதனமாகக் கொண்டு இந்த அரசு இயங்குகிறது. அன்று எதிர்க்கட்சியாக இருக்கும்போது 'மதுப் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் லஞ்சம் வாங்குகிறார்கள்' என்று டாஸ்மாக் பார் முன்பு மைக் பிடித்துப் பாடிய விஜய், இன்று அவரே முதலமைச்சரான பிறகு அந்த 10 ரூபாய் கூடுதல் கட்டணத்தை ஒழித்துவிட்டாரா? நாம் வேண்டுமானால் நக்கீரன் குழுவினரோடு சேர்ந்து நேரலையாக ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் சென்று டெஸ்ட் பண்ணிப் பார்ப்போம், அரசு அதற்குத் தயாராக இருக்கிறதா? ஆட்சி மாறியதே தவிர எதார்த்தத்தில் எந்த நடைமுறையும் மாறவில்லை, இன்னும் சொல்லப்போனால் முன்பை விட மோசமாகியுள்ளது" என்றார்.

Nakkheeran16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
'கடைகளை மூடிவிட்டு கலெக்ஷனை உயர்த்த பிளானா?'- 'வெற்றி தமிழ்நாடு' குறித்து வல்லம் பஷீர் விமர்சனம்
PulseNews சுருக்கம்

தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டதாக அரசு விளம்பரப்படுத்துவது பொய் என்று அரசியல் விமர்சகர் வல்லம் பஷீர் விமர்சித்துள்ளார். 'வெற்றி தமிழ்நாடு' என்ற பெயரில் அரசு விளம்பரம் செய்து வந்தாலும், நடைமுறையில் மது விற்பனையை அதிகரிக்கவே அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் நக்கீரன் டிவியில் குற்றம் சாட்டியுள்ளார்.

கடைகளைக் குறைப்பதாகக் கூறிக்கொண்டே, மது விற்பனை மூலம் கூடுதல் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிப்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஆன்லைன் முறை மற்றும் பார் பகுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது போன்ற பிரச்சனைகள் தொடர்வதாகவும், அரசு எதார்த்தத்திற்கு மாறாகச் செயல்படுவதாகவும் அவர் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#business