2026-ல சென்னையில வீடு வாங்க போறீங்களா? இந்த 8 இடங்கள கண்டிப்பா மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 2026-இல் அதீத வேகமெடுத்துள்ளது. ஆரவாரமில்லாமல் நிதானமாக உயர்ந்து வரும் சென்னையின் ரியல் எஸ்டேட் சந்தை, வீடுகள் வாங்க நினைப்பவர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் ஒரு பாதுகாப்பான களமாக விளங்கி வருகிறது. 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் சென்னையில் சுமார் 9,198 வீடுகள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டை விட 3 சதவீதம் அதிகம். சதுர அடியின் சராசரி விலை 5 சதவீதம் உயர்ந்து ரூ.7,555 ஆக உள்ளது. குறிப்பாக ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான நடுத்தர பிரிவு வீடுகளே 47 சதவீத விற்பனையை ஆக்கிரமித்துள்ளன. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகள், பல்லாவரம்–துரைப்பாக்கம் ரேடியல் சாலை விரிவாக்கம் மற்றும் ஓரகடம், சிறுசேரி தொழில் பூங்காக்களின் வளர்ச்சி ஆகியவை ரியல் எஸ்டேட் வளர்ச்சியை மேலும் தூண்டியுள்ளன. இந்த சூழலில், நீங்கள் சொந்தமாக குடியிருக்கவோ, வாடகை வருமானம் பெறவோ அல்லது எதிர்கால முதலீட்டிற்காகவோ வீடு வாங்க விரும்பினால், இந்த 8 பகுதிகள் சிறந்த தேர்வாக இருக்கும். 1. சோழிங்கநல்லூர் & துரைப்பாக்கம் (OMR ஐடி காரிடார்) சென்னையின் ஐடி மையமாகத் திகழும் சோழிங்கநல்லூர் மற்றும் துரைப்பாக்கம் பகுதிகள் உயர்ந்து வரும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்குப் பெயர் பெற்றவை. சோழிங்கநல்லூரில் அமையவுள்ள மெட்ரோ இரண்டாம் கட்ட சந்திப்பு இதற்கு மிகப்பெரிய பலம். ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வீட்டிற்கு அருகில் வசிக்க விரும்புவதால், இங்கு வாடகை தேவைகள் 8 முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. இங்கு சதுர அடி விலை தோராயமாக ரூ.7,000 முதல் ரூ.10,000 வரை விற்பனையாகிறது. பிரிிகேட் ஆல்டியஸ் (Brigade Altius), கேசாக்ராண்ட் ஃபர்ஸ்ட் சிட்டி (Casagrand First City) ஆகியவை இங்குள்ள சில முக்கிய புரொஜக்ட்ஸ். 2. நாவலூர், சிறுசேரி & கேளம்பாக்கம் சோழிங்கநல்லூருக்கு தெற்கே அமைந்துள்ள நாவலூர், சிறுசேரி மற்றும் கேளம்பாக்கம் பகுதிகள் குறைந்த விலையில் வீடுகளை விரும்புபவர்களுக்கான சிறந்த இடம். இங்கு சதுர அடி விலை ரூ.5,000 முதல் ரூ.7,500 வரம்பில் கிடைக்கிறது. சிறுசேரி சிப்காட் ஐடி பூங்கா மற்றும் புதிதாக வரும் டேட்டா சென்டர் முதலீடுகள் வேலைவாய்ப்பை உறுதி செய்கின்றன. ஹவுஸ் ஆஃப் ஹிரானந்தானி (House of Hiranandani), டிவிஎஸ் எமரால்டு வெர்டே விஸ்டா (TVS Emerald Verde Vista) போன்ற பிரமாண்டமான குடியிருப்பு திட்டங்கள் இங்கு அமைந்துள்ளன. 3. பல்லாவரம் & ஜி.எஸ்.டி. சாலை - ரேடியல் சாலை பகுதி சென்னை விமான நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள பல்லாவரம், 2026-ஆம் ஆண்டின் அதிவேக வளர்ச்சிப் பகுதியாக உருவெடுத்துள்ளது. பல்லாவரம்–துரைப்பாக்கம் ரேடியல் சாலை, ஐடி மண்டலத்தையும் விமான நிலையத்தையும் இணைப்பதால் முதலீட்டாளர்களின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. இங்கு சதுர அடி விலை தோராயமாக ரூ.7,000 முதல் ரூ.9,000 வரை உள்ளது. பிரஸ்டீஜ் பல்லாவரம் கார்டன்ஸ் (Prestige Pallavaram Gardens), டிவிஎஸ் எமரால்டு லைட்ஹவுஸ் (TVS Emerald LightHouse) போன்ற முன்னணி புரொஜக்ட்ஸ்இங்கு செயல்பட்டு வருகின்றன. 4. மேடவாக்கம், பள்ளிக்கரணை & பெரும்பாக்கம் வேளச்சேரிக்கும் ஒ.எம்.ஆர்-க்கும் இடையே அமைந்திருக்கும் இந்த பகுதி, குடும்பங்கள் வசிப்பதற்கு மிகவும் ஏற்ற இடம். நல்ல பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் சந்தை வசதிகள் இங்கு ஏற்கனவே நிறைந்துள்ளன. அபார்ட்மெண்ட்கள் மட்டுமின்றி வில்லா வீடுகளும் இங்கு கிடைக்கின்றன. அபார்ட்மெண்ட்களின் சதுர அடி விலை ரூ.6,000 முதல் ரூ.8,000 வரை உள்ளது; வில்லாக்கள் ரூ.1.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை விற்பனையாகின்றன. புர்வங்கரா (Purva Windermere), கேசாக்ராண்ட் மற்றும் DAC டெவலப்பர்ஸ் புரொஜக்ட்ஸ் இங்கு பிரபலம். 5. முகப்பேர் & அண்ணா நகர் மேற்கு நகரத்திற்குள்ளேயே அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடனும் வாழ விரும்பும் அண்ணாகர் விரும்பிகளுக்கு முகப்பேர் பகுதி சிறந்த தேர்வாகும். மெட்ரோ ரயில் இணைப்பு, முன்னணி பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் இங்கு மிக அருகில் உள்ளன. நிலத்தின் மதிப்பு அதிகம் என்பதால் இங்கு சதுர அடி விலை ரூ.8,500 முதல் ரூ.13,000 வரை உயர்ந்து காணப்படுகிறது. பிரிகேட் சானடு (Brigade Xanadu), டிவிஎஸ் எமரால்டு லக்சர் (TVS Emerald Luxor) ஆகிய சொகுசு புராஜக்ட்ஸ் இங்கு அமையப்பெற்றுள்ளன. 6. அடையாறு, வேளச்சேரி & கிண்டி மத்திய சென்னையில் சொகுசு மற்றும் பிரீமியம் வாழ்க்கையை விரும்புபவர்களுக்கு அடையாறு மற்றும் வேளச்சேரி - கிண்டி மண்டலம் மிகச் சிறந்தது. அடையாற்றில் சதுர அடி விலை ரூ.13,000 முதல் Rs ரூ.18,000 வரையிலும், வேளச்சேரி / கிண்டி பகுதியில் ரூ.9,000 முதல் Rs ரூ.13,000 வரையிலும் உள்ளது. தொழிலதிபர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு ஏற்ற உயர்தர பிரீமியம் குடியிருப்புகள் இங்கு அதிகம். 7. போரூர் & பூந்தமல்லி மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளால் அதிக லாபம் அடையப்போகும் பகுதிகளில் போரூரும் ஒன்று. மெட்ரோ இணைப்பு மற்றும் புறநகர் பகுதிகளுடனான எளிதான போக்குவரத்து காரணமாக இது நடுத்தர குடும்பங்களின் விருப்பமான தேர்வாக உள்ளது. போரூர் பகுதியில் சராசரியாக சதுர அடி விலை ரூ.6,500 முதல் ரூ.8,500 வரை உள்ளது. 8. தாம்பரம் & ஓரகடம் மண்டலம் குறைந்த பட்ஜெட்டில் சொந்தமாக இடம் அல்லது வீடு வாங்க நினைப்பவர்களுக்கு தாம்பரம், கேளம்பாக்கம் மற்றும் ஓரகடம் பகுதிகள் சிறந்த வாய்ப்பாகும். ஆட்டோமொபைல் மற்றும் தொழில்துறை வளர்ச்சி நிறைந்த ஓரகடம் பகுதியில் சதுர அடி விலை ரூ.4,000 முதல் ரூ.6,000 என்ற மலிவான விலையில் கிடைக்கிறது. நீண்ட கால அடிப்படையில் நிலத்தின் மதிப்பு கணிசமாக உயர வாய்ப்புள்ளது. யாருக்கு எந்த பகுதி ஏற்றது? வாடகை வருமானத்திற்கு: துரைப்பாக்கம், பெருங்குடி மற்றும் சிறுசேரி (ஐடி மண்டலங்கள்). குறைந்த பட்ஜெட் வீடுகளுக்கு: கேளம்பாக்கம், தாம்பரம் மற்றும் பெரும்பாக்கம். சொகுசு வாழ்க்கைக்கு: அடையாறு, அண்ணா நகர் மற்றும் இ.சி.ஆர். கடற்கரை பகுதிகள். வில்லா வீடுகளுக்கு: இ.சி.ஆர், கேளம்பாக்கம் மற்றும் ஓரகடம் பகுதி. எதிர்கால வளர்ச்சி & முதலீட்டிற்கு: சோழிங்கநல்லூர், பல்லாவரம் ரேடியல் சாலை மற்றும் மெட்ரோ இணைப்பு பகுதிகள் (போரூர்–பூந்தமல்லி). 2026 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை சென்னை ரியல் எஸ்டேட் சந்தை அவசர லாபத்தை விட நிலையான, நீண்டகால வளர்ச்சியை அளிக்கும். எனவே வீடோ அல்லது மனையோ வாங்குவதற்கு முன்பாக தமிழ்நாடு ஆர்.இ.ஆர்.ஏ. (TNRERA) அங்கீகாரம், சிஎம்டிஏ (CMDA) அனுமதி மற்றும் திட்டத்தின் தற்போதைய நிலவரத்தை நேரடியாக ஆய்வு செய்து முடிவெடுப்பது பாதுகாப்பானது.

2026-ஆம் ஆண்டில் சென்னையின் ரியல் எஸ்டேட் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 9,198 வீடுகள் விற்பனையாகியுள்ளன, இது கடந்த ஆண்டை விட 3 சதவீதம் அதிகம். சதுர அடியின் சராசரி விலை 5 சதவீதம் உயர்ந்து ரூ.7,555 ஆக உள்ளது. குறிப்பாக ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான நடுத்தர பிரிவு வீடுகள் மொத்த விற்பனையில் 47 சதவீதத்தைப் பிடித்துள்ளன. மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகள், தொழில் பூங்காக்களின் விரிவாக்கம் மற்றும் சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.
வீடு வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு சோழிங்கநல்லூர், நாவலூர், பல்லாவரம், மேடவாக்கம், முகப்பேர், அடையாறு, போரூர் மற்றும் தாம்பரம் உள்ளிட்ட 8 பகுதிகள் சிறந்த தேர்வாக உள்ளன. முதலீட்டாளர்கள் மற்றும் வீடு வாங்குபவர்கள் தங்களின் பட்ஜெட் மற்றும் தேவைக்கேற்ப இப்பகுதிகளைத் தேர்வு செய்யலாம். இருப்பினும், எந்தவொரு சொத்தை வாங்குவதற்கு முன்பும் அதன் தமிழ்நாடு ஆர்.இ.ஆர்.ஏ. (TNRERA) மற்றும் சி.எம்.டி.ஏ. (CMDA) அங்கீகாரங்களைச் சரிபார்ப்பது மிகவும் அவசியமாகும்.