PulseNews
வணிகம்

மனுஷன மனுஷனா பாப்பாங்க... சி.இ.ஓ-வே ட்ரெயின்ல தான் போவாரு; ஜப்பான் ஆபீஸ் ரகசியங்களை உடைத்த இந்தியர்

பொதுவாக பலருக்கும் வெளிநாடுகளில் வேலை பார்க்க வேண்டும் என்பது கனவாக இருக்கும். அதிலும், ஜப்பான் போன்ற நாடுகளில் வேலை பார்க்க வேண்டும் என்பது சிலரின் இலட்சியமாக உள்ளது. இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக ஜப்பானில் வேலை செய்து வரும் இந்தியர் ஒருவர் அங்குள்ள வேலை கலாச்சாரம் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐரோப்பால வெயில் கொளுத்துதா? கவலைய விடுங்க... இந்த டெஸ்டினேஷன் தான் கரெக்ட்; 40% ஆஃபர்ல ஒரு யூரோப் ட்ரிப் ஜப்பானில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கவனித்த முக்கிய விஷயங்கள் புரோஹித் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஜப்பானில் காலை 9 மணிக்கு வேலை தொடங்குகிறது என்றால், ஊழியர்கள் அதற்கு முன்பே அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சி.இ.ஓ (CEO) கூட ரெயிலில்தான் பயணம் செய்கிறார்கள். தினசரி பயணம் செய்வது ஒரு அந்தஸ்தின் அடையாளமாகப் பார்க்கப்படுவதில்லை. பெரும்பாலான ஊழியர்கள் வீட்டிலிருந்து லஞ்ச் கொண்டு வருவதற்குப் பதிலாக கன்வீனியன்ஸ் ஸ்டோர் பென்டோ பாக்ஸ்களை (Bento boxes) சாப்பிடுகிறார்கள். லிப்டில் செல்லும் பொழுது பட்டன்களுக்கு அருகில் இருக்கும் நபர் அனைவரும் வெளியேறும் வரை கதவைப் பிடித்துக்கொண்டு கடைசியாக வெளியேறுவார். லிப்ட் நாகரிகம் ரொம்ப முக்கியம். ஒவ்வொரு நிமிடமும் கணக்கிடப்படும் 15 நிமிடம் ஓவர் டைம் வேலை செய்தாலும் அதற்குத் துல்லியமாகச் சம்பளம் உண்டு. லாக் அவுட் செய்தவுடன் வேலை முடிந்துவிடும். அலுவலக நேரம் முடிந்த பிறகு அல்லது விடுமுறை நாட்களில் மேலாளர்கள் கூடுதல் வேலைக்காக வழக்கமாக அழைப்பதில்லை. இந்த சிறிய பழக்கவழக்கங்கள் உங்களை ஒரு சிறந்த ஊழியராக மாற்றுவது மட்டுமல்லாமல், ஒரு நபராக நீங்கள் வளரவும் உதவுகின்றன என்று குறிப்பிட்டார். வேகத்தை விட தரம் முக்கியம் தனிநபர் புகழை விட குழுப்பணிக்கு ஜப்பானிய அலுவலகங்கள் அதிக மதிப்பு அளிப்பதாக புரோஹித் கூறியுள்ளார். தகவல் தொடர்பு முன்கூட்டியே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்கள் புதிய திறன்களைத் தொடர்ந்து கற்றுக்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். நிறுவனங்கள் வேலையைச் சும்மா வேகமாக முடிப்பதை விட அதைச் சிறப்பாகச் செய்வதற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. ஊழியர்களுக்குக் கூடுதல் வேலைக்குச் சம்பளம் வழங்கப்படுவதையும், மேலாளர்கள் வேலை நேரம் முடிந்த பிறகு அல்லது விடுமுறை நாட்களில் ஊழியர்களைத் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பதையும் அவர் குறிப்பிட்டார். அவரது வீடியோ பார்வையாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் பலரும் ஜப்பானின் ஒழுக்கம், தொழில்முறை மற்றும் ஊழியர்களுக்கு அளிக்கும் மரியாதையைப் பாராட்டியுள்ளனர், அதே நேரத்தில் மற்றவர்கள் இந்த நடைமுறைகள்தான் ஒரு நாள் அங்கு வேலை செய்ய விரும்புவதற்கான முக்கிய காரணம் என்று கூறியுள்ளனர்.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

The Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business