தூத்துக்குடியில் புதிய அனல் மின் நிலையம்.. 196 புதிய துணை மின் நிலையங்கள்.. முதல்வர் விஜய் அறிவிப்பு | Power Infrastructure Projects
Power Infrastructure Projects: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் மின்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.33,066 கோடி, தூத்துக்குடியில் ரூ.20,800 கோடியில் 1,600 மெகாவாட் சூப்பர் கிரிட்டிக்கல் அனல்மின் நிலையம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களை முதல்வர் விஜய் அறிவித்தார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில், மாநிலத்தின் மின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.33,066 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதனுடன், தூத்துக்குடியில் ரூ.20,800 கோடி மதிப்பீட்டில் 1,600 மெகாவாட் திறன் கொண்ட புதிய சூப்பர் கிரிட்டிக்கல் அனல் மின் நிலையம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்களின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் 196 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். மின் விநியோகத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.