TN Assembly Today Live Updates: சட்டசபை கூட்டம் - உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மானியக் கோரிக்கை
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி தொடங்கியது. இதில் முதல் நாளில், நிதியமைச்சர் மரிய வில்சன், பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 6-ந் தேதி வேளாண் அமைச்சர் வினோத், வேளாண் துறைக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 7-ந் தேதி பட்ஜெட் மீதூன விவாதங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 17 முதல், மானியக் கோரிக்கை தொடர்பான விவாதங்கள் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இதனிடையே நேற்று (ஆகஸ்ட் 19) விதி எண் 110-ன் கீழ், புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் விஜய், ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு, மருத்துவ காப்பீடு திட்டம் உயர்வு, பெரம்பூரில் பல்நோக்கு மருத்துவமனை, எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்கப்படும் என்று அறிவித்தார். மீனாட்சி அம்மன் கோபுரத்தில் விளக்குகள்: முஸ்தபா கோரிக்கை ஸ்ரீரங்கத்தில் இருப்பதைப் போல மதுரையில் ‘யாத்திரா நிவாஸ்’ அமைக்க வேண்டும். மீனாட்சி அம்மன் கோபுரத்தில் கண்கவரும் வண்ண விளக்குகள் அமைக்க வேண்டும். மதுரை வைகை நதி மேம்பாலத்தில் வண்ண விளக்குகள் அமைத்து சுற்றுலா பயணிகள் அழகரை ரசிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா கோரிக்கை விடுத்துள்ளார். தி.மு.க ஆட்சியில் இதை ஏன் செய்யவில்லை? - சட்டப் பேரவையில் தவெக எம்எல்ஏ கேள்வி நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தேர்தலில் தோற்கடித்து, 1989ம் ஆண்டு எங்களைப் போன்ற இளைஞராக சட்டமன்றத்திற்கு வந்தவர் துரை சந்திரசேகரன். அவர் இவ்வளவு கோரிக்கையை வைத்தார், நாங்கள் தான் புதிதாக வந்தவர்கள், அவர் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர். திமுக ஆட்சியில் இதை ஏன் அவர் செய்யவில்லை என த.வெ.க. எம்எல்ஏ விஜய் சரவணன் கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் நிதியமைச்சர் மரிய வில்சன் பொது பட்ஜெட்டையும், மறுநாள் வேளாண் அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டையும் தாக்கல் செய்தனர்.
ஆகஸ்ட் 7 முதல் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடங்கி புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறுகின்றன.