அமெரிக்க செனட் சபையில் மசோதா நிறைவேற்றம்: இந்திய பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்க வாய்ப்பு
ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கும் மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்க அதிகாரம் அளிக்கும் புதிய தடைகள் மசோதாவுக்கு அமெரிக்க செனட் சபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளது.

ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான புதிய மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு அந்த அவை முன்னதாக ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த புதிய சட்டத்தின் மூலம், ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு, 100 சதவீத வரி விதிப்பதற்கான அதிகாரம் அமெரிக்காவிற்கு வழங்கப்படுகிறது. இதன்காரணமாக, இந்தியப் பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.