2026-27 ஆம் ஆண்டுக்கான புதுச்சேரி பட்ஜெட் : முதலமைச்சர் ரங்கசாமி நாளை தாக்கல் செய்கிறார்..!
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் ரங்கசாமி திங்கட்கிழமை மாலை தாக்கல் செய்யவுள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 16 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நாளை திங்கட்கிழமை தொடங்குகிறது. அதன்படி, நாளைய காலை 09.30 மணியளவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையாற்றுகிறார். பின்னர், பிற்பகல் 03 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி 14 ஆயிரத்து 300 கோடி ரூபாய்க்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். இந்த நிதிநிலை அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையில், முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் சனிக்கிழமை இரவு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் ஆளுநர் உரை இறுதி செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெறக் கூடிய புதிய அறிவிப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அத்துடன், துணைநிலை ஆளுநர் உரை மற்றும் முதலமைச்சரின் நிதிநிலை அறிக்கை உரையை நேரடியாக ஒளிபரப்பு செய்ய சட்டமன்ற செயலகம் விரிவான ஏற்பாடு செய்துள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவையின் 16-வது கூட்டத்தொடர் நாளை திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனின் உரையுடன் தொடங்குகிறது. இத்தொடரில், நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி, 2026-27-ஆம் ஆண்டுக்கான 14 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த பட்ஜெட் தாக்கல் செய்யும் நிகழ்வு திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் இறுதி கட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.