PulseNews
வணிகம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநராக ஆஷிஷ் சாட்டர்ஜி நியமனம்!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகத் பணியாற்றி வந்த எம்.ஏ.சித்திக் ஐஏஎஸ் தமிழ்நாடு அரசின் புதிய நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். அதே சமயம் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பதவியையும் எம்.ஏ.சித்திக் கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநராக ஆஷிஷ் சாட்டர்ஜி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 1999ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். சென்னை மாநகராட்சியில் நகர்ப்புற மேம்பாடு மற்றும் நகர நிர்வாகம் சார்ந்த பணிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார், முன்னதாக விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் மத்திய அரசின் எஃகு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராகவும், நிதி ஆலோசகராகவும் டெல்லியில் பணியாற்றி வந்த ஆஷிஷ் சாட்டர்ஜி, தற்போது மீண்டும் தமிழகப் பணிக்குத் திரும்பியுள்ளார். இந்நிலையில் சென்னை மெட்ரோவின் புதிய நிர்வாக இயக்குநராகத் பொறுப்பேற்க உள்ளார். சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இவரது நிர்வாக அனுபவம் திட்டங்களை விரைந்து முடிக்கப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநராக ஆஷிஷ் சாட்டர்ஜி நியமனம்!
PulseNews சுருக்கம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி ஆஷிஷ் சாட்டர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1999-ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.

முன்னதாக, நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட எம்.ஏ.சித்திக், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். தற்போது அந்த இடத்திற்கு ஆஷிஷ் சாட்டர்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#business