தஞ்சையில் நாளை மறுநாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்..!
தஞ்சை வேலைவாய்ப்பு முகாம் செய்தி: தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆகஸ்ட் 21 அன்று நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 8ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு நேரடி தேர்வில் பங்கேற்கலாம். Thanjavur private job fair news: District employment office hosts camp on August 21 where candidates from Class 8 to graduates can apply directly for over 100 private sector vacancies.

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டதாரிகள் வரை அனைவரும் பங்கேற்கலாம்.
இந்த முகாமின் மூலம் 100-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு நேரடி நேர்காணல் வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.