Tasmac cigarettes ban : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! இனி டாஸ்மாக் பார்களில் சிகரெட்டிற்கு தடை- தமிழக அரசு அதிரடி

டாஸ்மாக் கடைகள்- மது விற்பனை

தமிழகத்தில் சுமார் 4 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகள் மூலம் தினந்தோறும் அரசுக்கு 100 முதல் 150 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. அதிலும் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு என்றால் இரண்டு மடங்காக மதுபான விற்பனை அதிகரிக்கும். இந்த நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள தவெக அரசு டாஸ்மாக் கடைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதிலும் பேருந்து நிலையம், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தளங்களுக்கு அருகில் உள்ள சுமார் 700க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது.

மேலும் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலிப்பதை தடுக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சுமார் 25% ஊதியத்தை உயர்த்தி அறிவித்துள்ள தமிழக அரசு இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

டாஸ்மாக் கடைக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

இந்த நிலையில் அடுத்த அதிரடியாக டாஸ்மாக் பார்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், டாஸ்மாக் பார்களில் சிகரெட், பீடி, புகையிலை விற்பனை செய்ய தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தண்ணீர் பாட்டில், நொறுக்கு தீணிகள் அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடைக்கு சீல் வைக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Abp News-இல் முழு செய்தியைப் படிக்க →