PulseNews
வணிகம்

எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு: அக்டோபர் 1 முதல் பணம் எடுத்தால் கட்டணம்

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு (BSBD) வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கான சேவைக் கட்டண விதிகளில் மாற்றம் செய்துள்ளது. இந்த புதிய விதிகள் 2026 அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு (BSBD) வைத்திருப்பவர்கள் ஒரு மாதத்தில் முதல் 4 பணப் பரிவர்த்தனைகளை இலவசமாக மேற்கொள்ளலாம். அதற்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.15 மற்றும் அதற்கான சரக்கு மற்றும் சேவை வரி கட்டணமாக வசூலிக்கப்படும். முன்பு, 4 இலவச பரிவர்த்தனைகளை கணக்கிடும்போது இணையம் மற்றும் பிற மின்னணு வழிகளில் செய்யப்பட்ட பணப் பரிவர்த்தனைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஆனால், அக்டோபர் 1 முதல் இந்த விலக்கு நீக்கப்படுகிறது. அடிப்படை சேமிப்பு கணக்கு (BSBD) என்றால் என்ன? குறைந்த வருமானம் கொண்டவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வங்கி சேவையை எளிதாகப் பயன்படுத்தி சேமிக்கும் நோக்கத்தில் இந்த அடிப்படை சேமிப்பு கணக்கு வழங்கப்படுகிறது. இந்தக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனினும், இந்தக் கணக்கில் காசோலைப் புத்தகம் வழங்கப்படாது. கிளையில் பணம் எடுக்கும்போது பணம் எடுக்கும் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும். மேலும், ஏ.டி.எம். மூலமும் பணம் எடுக்கலாம். வாடிக்கையாளர்களுக்கு அடிப்படை ரூபே ஏ.டி.எம்.-பற்று அட்டை இலவசமாக வழங்கப்படுகிறது. முக்கிய நிபந்தனை எஸ்.பி.ஐ.யில் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு வைத்திருக்கும் ஒருவர், அதே வங்கியில் வேறு சேமிப்பு வங்கிக் கணக்கை வைத்திருக்க முடியாது. ஏற்கெனவே வேறு சேமிப்பு கணக்கு இருந்தால், அடிப்படை சேமிப்பு கணக்கு தொடங்கிய 30 நாட்களுக்குள் அந்தக் கணக்கை மூட வேண்டும். ஒரு மாதத்தில் அதிகபட்சம் 4 பணம் எடுத்தல் பரிவர்த்தனைகள் இலவசமாக இருக்கும். இதில் சொந்த வங்கி மற்றும் பிற வங்கிகளின் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பது, வங்கி கிளை மூலம் பணம் எடுப்பது மற்றும் ஏ.இ.பி.எஸ். (AEPS) மூலம் பணம் எடுப்பது ஆகியவையும் அடங்கும். மேலும் என்னென்ன சேவைகள் இலவசம்? அடிப்படை சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ரூபே ஏ.டி.எம்.-டெபிட் கார்டுக்கு (RuPay ATM-cum-Debit Card) ஆண்டு பராமரிப்புக் கட்டணம் வசூலிக்கப்படாது. மேலும், இணையவழி பணப் பரிமாற்ற முறைகளான நெஃப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ் (NEFT / RTGS) மூலம் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதற்கும் கட்டணம் இல்லை. மத்திய அல்லது மாநில அரசு வழங்கும் காசோலைகளை டெபாசிட் செய்ய கட்டணம் இல்லை. செயல்படாமல் இருக்கும் கணக்கை மீண்டும் செயல்படுத்துவதற்கும் கட்டணம் இல்லை. அதேநேரத்தில், கணக்கை மூடுவதற்கு கட்டணம் உள்ளது. எனவே, எஸ்.பி.ஐ.யின் அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், குறிப்பாக அடிக்கடி ஏ.டி.எம். அல்லது வங்கி கிளை மூலம் பணம் எடுப்பவர்கள், அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய கட்டண விதியை கவனத்தில் கொள்ள வேண்டும்.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு: அக்டோபர் 1 முதல் பணம் எடுத்தால் கட்டணம்
PulseNews சுருக்கம்

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), தனது அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு (BSBD) வைத்திருப்பவர்களுக்கான கட்டண விதிகளில் திருத்தம் செய்துள்ளது. இந்த புதிய நடைமுறைகள் வரும் 2026 அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தின்படி, வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு 4 முறை மட்டுமே கட்டணமில்லாமல் பணம் எடுத்துக் கொள்ள முடியும். அதற்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் 15 ரூபாய் மற்றும் அதற்கான சரக்கு மற்றும் சேவை வரியை கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business