PulseNews
வணிகம்

‘டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு...’ - வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பப் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டுக்கான குரூப் 2, 2ஏ தேர்வு தேதியை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 1ஆம் தேதி குரூப் 2, 2ஏ பிரிவுக்கான முதல்நிலைத் தேர்வு நடைபெறும் எனவும், தேர்வுக்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் செப்டம்பர் 9ஆம் தேதி இணையவழியாக விண்ணப்பம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு விண்ணப்ப நடைமுறை குறித்து விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 821 பணியிடங்களுக்கான குரூப் 2, 2ஏ தேர்வு இந்தாண்டு நவம்பர் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Nakkheeran16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
‘டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு...’ - வெளியான முக்கிய அறிவிப்பு!
PulseNews சுருக்கம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடப்பாண்டுக்கான குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான தேர்வு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, இந்தத் தேர்வுகளுக்கான முதல்நிலைத் தேர்வு நவம்பர் 1-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 1, 2 மற்றும் 4 உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி தொடர்ந்து தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது குரூப் 2, 2ஏ தேர்வு குறித்த இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#business