"மின்சாரக்கண்ணா..! மின்சாரப்பிரச்சினைய கவனிங்கண்ணா" - தொடரும் பவர் கட்டை விமர்சித்து நடிகை கஸ்தூரி பதிவு
தமிழ்நாட்டில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின்வெட்டு மற்றும் அதிகரித்து வரும் மின்கட்டணம் குறித்து பொதுமக்கள் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், நடிகை கஸ்தூரியும் தமிழக அரசை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இரவு மற்றும் பகல் நேரங்களில் நீண்ட நேரம் மின்தடை ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், “மின்சாரக்கண்ணா! மின்சாரப் பிரச்சினைய கவனிங்கண்ணா!” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் மின்வெட்டுப் பிரச்சினைகள் மற்றும் மின்கட்டண உயர்வு குறித்து மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. இந்தச் சூழலில், நடிகை கஸ்தூரியும் தமிழக அரசை விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
பகல் மற்றும் இரவு நேரங்களில் நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், "மின்சாரக்கண்ணா! மின்சாரப் பிரச்சினைய கவனிங்கண்ணா!" என்று குறிப்பிட்டு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.