PulseNews
வணிகம்

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்வு: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

மின்வாரியத்தில் சுமார் 33 ஆயிரம் கோடியில் மின் தொடர்மைப்பு மேம்படுத்தப்படும் எனவும், தூத்துக்குடியில் ஆயிரத்து 600 மெகா வாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 44 ரூபாயாக உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவிப்பு. ஏற்கனவே லிட்டருக்கு ரூபாய் 3 உயர்த்தப்பட்ட நிலையில் மேலும் ரூபாய் 3 அதிகரிப்பு. இனி பால் கொள்முதல் விலை - லிட்டருக்கு ரூ.44. ஏற்கனவே ரூ.38ல் இருந்து ரூ.41ஆக உயர்த்தப்பட்டு தற்போது மேலும் ரூ.3 உயர்வு. ரூ.33,066 கோடி செலவில் மின் தொடரமைப்பு மேம்பாட்டு திட்டம் தமிழ்நாட்டில் 33 ஆயிரத்து 66 கோடி ரூபாய் செலவில் மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம். 196 புதிய மின் நிலையங்களும், 15 ஆயிரம் கிலோ மீட்டருக்கு புதிய மின்பாதைகளும் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவிப்பு. ரூ.20,800 கோடியில் தனியார் பங்களிப்புடன் அனல்மின் நிலையம் தூத்துக்குடியில் தலா 800 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகளுடன் தனியார் பங்களிப்புடன் புதிய அனல் மின் நிலையம். 20ஆயிரத்து 800 கோடி செலவில் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவிப்பு. ரூ.175 கோடியில் மதுரமங்கலத்தில் செமிகண்டக்டர் பூங்கா காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்தில் 175 கோடி ரூபாயில் செமிகண்டக்டர் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி பூங்கா. 2ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 5000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும் என முதலமைச்சர் விஜய் அறிவிப்பு. ரூ.400 கோடியில் கோவையில் டிஜிட்டல் நிதி மையம் டிட்கோ சார்பில் 400 கோடி ரூபாயில் கோவையில் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும். உயர்தர வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் அறிவிப்பு.

Polimer News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பால் கொள்முதல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்வு: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
PulseNews சுருக்கம்

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு மேலும் 3 ரூபாய் உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். ஏற்கனவே 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால், பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 44 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதனுடன் சேர்த்து, மின்வாரியத்தில் 33 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின் கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டத்தையும் அவர் அறிவித்தார். மேலும், தூத்துக்குடியில் 1,600 மெகா வாட் திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையம் அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும் முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business