PulseNews
வணிகம்

சிவகாசி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது.. ரயில் நிலையம், மருத்துவமனைக்கு புதிய பேருந்து சேவை!

தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ச.கீர்த்தனா, சிவகாசி ரயில் நிலையத்திற்கான புதிய வழித்தட பேருந்து சேவையினை தொடங்கி வைத்தார்.

அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தது

தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் கீர்த்தனா, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தலைமையில் சிவகாசி என்.ஆர்.கே.ராஜரத்தினம் பேருந்து நிலையத்தில் சிவகாசி ரயில் நிலையத்திற்கான புதிய வழித்தட பேருந்து சேவையினை தொடங்கி வைத்தார். அமைச்சர் கீர்த்தனா தெரிவித்ததாவது.." தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள். பொதுமக்களின் போக்குவரத்து வசதியினை மேம்படுத்திடவும், பாதுகாப்பான போக்குவரத்தினை உறுதி செய்திடவும் அதிக முன்னுரிமை எடுத்து விபத்தில்லா தமிழகம் என்ற நிலையினை எய்திட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கிராம பொதுமக்கள் பணியின் காரணமாக நகரங்களுக்கும், நகரங்களை கிராமங்களோடு இணைப்பதற்கும் பொது போக்குவரத்துத்துறையின் செயல்பாடுகள் இன்றியமையாததாக உள்ளது.

சூழ்நிலையை மாற்றிடும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சிவகாசி மாநகராட்சி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிவகாசி என்.ஆர்.கே.ராஜரத்தினம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவகாசி ரயில் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு பேருந்து வசதி இல்லாத நிலையினை சீர்படுத்தும் வகையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு பொதுமக்களின் கோரிக்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் வகையில் விரைந்து அனுமதி அளிக்கப்பட்டது. இதுநாள் வரை பொதுமக்கள் பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையத்திற்கும், அரசு மருத்துவமனைக்கும் ஆட்டோ, இரண்டு சக்கர வாகனம் மற்றும் இதர தனியார் வாகனங்கள் மூலமாக சென்றனர். இதனால் பொதுமக்களுக்கு கூடுதல் செலவினமும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வந்தனர். இந்த சூழ்நிலையை மாற்றிடும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்கள் பேருந்து வசதியினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

அதனடிப்படையில் புதிய வழித்தட பேருந்து வசதி துவக்கி வைக்கப்படுகிறது. தினமும் இப்பேருந்தானது 10 முறை இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொதுமக்களின் தேவையினை அறிந்து நிறைவேற்றுவதில் எவ்வித சமரசமுமின்றி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி பொதுமக்களிடம் பேருந்து வசதி செய்து தரப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழி இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் பேருந்து வசதியினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

Abp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business