PulseNews
வணிகம்

புதிய களத்தில் இறங்கும் அதானி குழுமம்: விமான நிறுவனத்தைத் தொடங்க மத்திய அரசிடம் கோரிக்கை

இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ள அதானி குழுமம், இதுவரை விமான நிறுவனங்கள் (Airlines) தொடங்குவதைத் தவிர்த்து வந்த நிலையில், தற்போது சொந்தமாக விமான நிறுவனத்தையே தொடங்குவது குறித்துப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதானி குழுமத்தின் கோரிக்கையை அடுத்து, விமான நிறுவனம் மற்றும் விமான நிலைய வணிகங்களில் உள்ள குறுக்கு-உரிமை (Cross-owner ship) கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்துச் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (MoCA) முதற்கட்ட ஆலோசனைகளைத் தொடங்கி உள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், விமான நிறுவனங்களும் விமான நிலையங்களில் பங்குகளை வாங்குவதற்கு வழிவகுக்கும். இந்தியாவில் இண்டிகோ (IndiGo), ஏர் இந்தியா (Air India) ஆகிய 2 நிறுவனங்கள் மட்டுமே சுமார் 90% உள்நாட்டுச் சந்தைப் பங்கைக் கொண்டு உள்ளன. இந்த இருவர் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் 'டுவோபோலி' (Duopoly) சூழலை கட்டுப்படுத்தவும், சந்தையில் போட்டியை அதிகரிக்கவும் அதிக எண்ணிக்கையிலான விமான நிறுவனங்கள் வர வேண்டும் என்று அரசு விரும்புவதே இந்த ஆலோசனையின் முக்கிய நோக்கமாகும். தற்போது அதானி குழுமம் இந்தியாவில் 8 விமான நிலையங்களை இயக்கி வருகிறது. மேலும், தரைக்கட்டுப்பாடு (Ground handling), பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு (MRO), மற்றும் விமானிகளுக்கான பயிற்சிகள் போன்ற துறைகளிலும் வலுவான தடம் பதித்துள்ளது. இதுமவிர, பிரேசிலின் எம்ப்ரேயர் (Embraer) நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் விமான தயாரிப்பு ஆலையையும் அமைக்க அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய விதிமுறைகளின்படி, டெல்லி, மும்பை விமான நிலையங்களை இயக்கும் நிறுவனங்கள், எந்தவொரு விமான நிறுவனத்திலும் 10%-க்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டை நீக்குமாறு அதானி குழுமம் கோரியுள்ளது. மும்பை விமான நிலையத்தில் அதானி குழுமத்திற்கு 74% பங்கும், டெல்லி விமான நிலையத்தில் ஜி.எம்.ஆர் (GMR) நிறுவனத்திற்கு 74% பங்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதானி குழுமம் வேறொரு நிறுவனத்தில் சிறுபான்மைப் பங்கை வாங்குவதற்குப் பதிலாக, முழுமையானக் கட்டுப்பாட்டுடன் சொந்தமாக ஒரு விமான நிறுவனத்தை இயக்கவே விரும்புவதாகத் தெரிகிறது. இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சட்ட ஆலோசனைகளைப் பெறத் தொடங்கியுள்ளது. இந்த விதியில் மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவையின் (Union Cabinet) ஒப்புதல் தேவைப்படும். அதானி குழுமத்தின் விமானப் போக்குவரத்துப் பிரிவைக் கவனித்து வரும் ஜீத் அதானி, கடந்த டிசம்பர் மாதம் அளித்த பேட்டியில், விமான நிறுவனங்களைத் தொடங்குவது தங்களது முதலீட்டுக் கொள்கைக்கு ஏற்றதல்ல என்பதால் அதில் ஆர்வமில்லை என்று கூறியிருந்தார். இருப்பினும், தற்போது 2 முக்கியக் காரணங்களால் அவர்களின் நிலைப்பாடு மாறியுள்ளது. சந்தையில் போட்டியை அதிகரிக்க அரசு அளிக்கும் அழுத்தம். எம்ப்ரேயர் பயணிகள் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அதானியின் புதிய திட்டம் (FAL Project). தங்களின் சொந்த விமான ஆலைக்குத் தங்களின் சொந்த விமான நிறுவனமே முதல் வாடிக்கையாளராக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் கடும் போட்டி, எரிபொருள் விலை மற்றும் உலகளாவிய உதிரிப் பாகங்கள் தட்டுப்பாடு காரணமாகப் பல விமான நிறுவனங்கள் நஷ்டமடைந்து மூடப்பட்டுள்ளன. கடந்த டிசம்பரில் இண்டிகோ நிறுவனத்தில் ஏற்பட்ட சேவை முடக்கம், ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதால் ஏற்படும் ஆபத்தை வெளிப்படுத்தியது. ஒரு விமான நிலைய நிறுவனமே சொந்தமாக விமான நிறுவனத்தையும் நடத்த அனுமதித்தால், 'நலன் முரண்' (Conflict of interest) பிரச்னைகள் எழ வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தங்களது சொந்த விமானத்திற்கு முன்னுரிமை அளிப்பது, பிற நிறுவனங்களுக்கு இடங்களை (Slots) ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவது போன்ற புகார்கள் வரக்கூடும். எனவே, அரசு இதற்கு அனுமதி அளித்தாலும், இரு வணிகங்களும் தனித்தனியாகவும் சுதந்திரமாகவும் இயங்குவதை உறுதிசெய்யக் கடுமையான விதிமுறைகளைக் கொண்டுவர வேண்டும் என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

The Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business