PulseNews
வணிகம்

பெரம்பூர் தொகுதியை விட்டுக்கொடுத்த த.வெ.க சிவா; முக்கியப் பதவி கொடுத்த விஜய்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் புதிய தலைவராக, தமிழக வெற்றிக் கழகத்தின் சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் சிவா நியமிக்கப்பட்டுள்ளார். கட்சித் தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெறத் தீவிரமாகக் களப்பணியாற்றிய அவருக்கு, பூச்சி முருகனின் ராஜினாமாவைத் தொடர்ந்து இந்த முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, வீட்டு வசதி வாரியத் தலைவராகப் பணியாற்றி வந்த பூச்சி முருகன், த.வெ.க ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து காலியாக இருந்த இந்த இடத்திற்குத் தற்போது சிவா நியமிக்கப்பட்டுள்ளார். விஜயின் வெற்றிக்குக் உழைத்தவர்: த.வெ.க-வின் உறுப்பினர்கள் சேர்க்கையில் மிக முக்கியமான இடமாகப் பெரம்பூர் தொகுதி விளங்கி வருகிறது. அங்கு மட்டுமே சுமார் 45 ஆயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைச் சேர்த்து, கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தியவர் பெரம்பூர் மாவட்டச் செயலாளரான சிவா. கடந்த தேர்தலில் இவருக்குப் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் த.வெ.க தலைவரும் தற்போதைய முதல்வருமான விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வேட்பாளர்களை அறிமுகம் செய்த நிகழ்விலேயே, "எனக்காகப் பெரம்பூர் தொகுதியை விட்டுக்கொடுத்தவர் சிவா" என்று மேடையிலேயே விஜய்யால் பாராட்டப்பட்டவர் இவர். முதல்வர் விஜய்யின் வெற்றிக்காகத் தேர்தல் களத்தில் தீவிரமாகப் பணியாற்றிய அவருக்கு, தற்போது "தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர்" எனும் மிக முக்கியமான பொறுப்பு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

The Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business