PulseNews
வணிகம்

காவிரியில் தமிழகத்துக்கு 12,000 கன அடி நீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது**. இதன்படி, கபினி அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கன அடி நீரும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து விநாடிக்கு 2,000 கன அடி நீரும் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளதால், தமிழக எல்லையான ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 8,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும், அணைகளில் இருந்து தொடர்ந்து நீர் திறக்கப்பட்டு வருவதால், ஒகேனக்கல் பகுதியில் காவிரி நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Polimer News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
காவிரியில் தமிழகத்துக்கு 12,000 கன அடி நீர் திறப்பு
PulseNews சுருக்கம்

கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்குத் திறந்துவிடப்படும் காவிரி நீரின் அளவு விநாடிக்கு 12,000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் கபினி அணையிலிருந்து 10,000 கன அடியும், கே.ஆர்.எஸ். அணையிலிருந்து 2,000 கன அடி நீரும் காவிரி ஆற்றில் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீர்வரத்து காரணமாக, தமிழக எல்லையான ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 8,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அணைகளிலிருந்து தொடர்ந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business