அரசாணை வந்தே 2 மாதமாச்சு... இன்னும் வழங்கப்படாத குறுவை தொகுப்பு நிதி: விவசாயிகள் வேதனை

தஞ்சாவூர்: குறுவை தொகுப்பு அறிவிக்கப்பட்டு 2 மாதங்கள் ஆன போதும் இன்னும் அதற்கான நிதி வந்து சேரவில்லை. ஆனால் குறுவை சாகுபடி அறுவடையை நெருங்கியே விட்டது என்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

குறுவை தொகுப்பு நிதிக்கான அரசாணை வெளியிடப்பட்டு 2 மாதங்களாகியும் இன்னும் வழங்கப்படாததால் டெல்டா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், குறுவை, சம்பா சிறப்பு தொகுப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் உர மானியம், இடுபொருட்கள், ரொக்கம் ஆகியவை வழங்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் இந்தாண்டு தமிழக அரசு குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்தது. இதற்காக ரூ.134.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது. குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டுமானால், விவசாயிகள் வரிசை நடவு செய்திருக்க வேண்டும், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும், அதிகபட்சமாக 2 ஏக்கர் வரை ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி விவசாயிகளும் இயந்திரம் மூலம் நடவு செய்ததற்கான ரசீது, கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல், கணினி சிட்டா உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களுடன் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பித்தனர். இந்த திட்டத்துக்கு நிதியை ஒதுக்கீடு செய்து கடந்த 12.6.2026 அன்று தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டது.

இதற்கிடையே, குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் அடுத்த மாதம் முதல் அறுவடையைத் தொடங்க உள்ளனர். ஆனால் குறுவை தொகுப்பு நிதியை இன்னும் வழங்காததால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், “குறுவை தொகுப்பு திட்டம் ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டு,அரசாணையும் வெளியிடப்பட்டது.

குறுவை தொகுப்பு திட்டத்துக்கான நிதியை விவசாயிகளுக்கு வழங்கி விட்டதாக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தெரிவித்தார். ஆனால், இதுவரை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இந்த திட்டத்துக்கான நிதி வரவு வைக்கப்படவில்லை. குறுவை சாகுபடியும் முடிந்து இன்னும் ஒரு மாதத்தில் அறுவடை தொடங்கி விடும். ஆனால் நிதி மட்டும் இதுவரை வரவில்லை. எனவே நிதியை உடனே விடுவிக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அதற்கான நிதி வங்கி மூலம் வரவு வைக்கப்படும்” என்றனர்.

எது எப்படி இருந்தாலும் உரிய நேரத்தில் எதுவும் கிடைக்காவிடில் அதன் பயன் என்னவோ புல்லுக்கு இறைந்த நீர் போல் வீணாகி விடும். எனவே இனியும் காலம்தாழ்த்தாமல் பரிசீலனை என்ற பெயரில் நேரத்தை கடத்தாமல் விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு நிதி கிடைக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை தொகுப்பு நிதி அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும், விவசாயிகளுக்கு இதுவரை நிதி வந்து சேரவில்லை. தற்போது குறுவை சாகுபடி அறுவடை காலத்தை நெருங்கிவிட்டதால், விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.
தமிழகத்தில் நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் குறுவை தொகுப்பு நிதிக்கான அரசாணை வெளியிடப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகிறது. இருப்பினும், நிதி இதுவரை வழங்கப்படாதது டெல்டா பகுதி விவசாயிகளிடையே அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.