PulseNews
வணிகம்

Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (27-08-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

Tamil Nadu Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை (ஆகஸ்ட் 27 ஆம் தேதி) எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை காலை 9 மணி முதல் பல்வேறு மாவட்டங்களில் மின் தடை செய்யப்படவுள்ளது.

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

கோவை மாவட்டம்

இரும்பறை, பெத்திகுட்டை, சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அனதாசம்பாளையம், அக்கரைசெங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர், ஆங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சேத்துமடை, டாப்சிலிப், பரம்பிக்குளம், பரமடையூர், பி.என்.நூர், எம்.ஜி.நூர், சோமந்துரைச்சித்தூர், என்.எம்.சுங்கம், ஆழியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பளபட்டி, சிலோன் காலனி.

மயிலாடுதுறை மாவட்டம்

பொறையார் டவுன், தில்லையாடி, சாத்தனூர், தரங்கம்பாடி, குடிநீர் திட்டப் பகுதிகள் , சங்கரன்பந்தல், திருக்கடையூர். செம்பனார்கோவில், எம்.ஆர்.எம், பூம்புகார், மாணிக்ககிராமம், ஆக்கூர், திருவாலி.

அரியலூர் மாவட்டம்

வி.ஆர்.பேட்டை, அகரம், நாகம்பந்தல், பெரியகருக்கை, சின்னத்துக்குறிச்சி, மேலவல்லம், கங்குழி, குளத்தூர், பூக்குழி, வல்லம், அய்யூர், இரவங்குடி, நல்லூர், காடுவெட்டி, மேலநிகுழி, பவர்கிரிட்.

விருதுநகர் மாவட்டம்

மல்லாங்கிணறு, வலையன்குளம், அழகியநல்லூர், கப்பிலிங்கம்பட்டி, நாகம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள். பாண்டியன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், அழகை நகர், பி.எஸ்.கே. நகர், மலையடிப்பட்டி, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை பகுதி, சத்திரப்பட்டி, மொட்டமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (27-08-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
PulseNews சுருக்கம்

தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 27, 2026) மேற்கொள்ளப்படவுள்ள மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் குறித்த விவரங்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் கம்பங்களைச் சீரமைத்தல், மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல் மற்றும் சிறிய பழுதுகளை நீக்குதல் போன்ற பணிகள் இதன்போது மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் எந்தெந்த மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ பட்டியலை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business