PulseNews
வணிகம்

தமிழக பெண்களுக்கு அரசு அசத்தல் திட்டம்.! பூ, காய்கறி விற்பனை செய்வோருக்காக ரூ.5000 வரை கடன் தரும் அரசு.!

சிறு கடன் திட்டம் : பூ, காய்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து தொழில் செய்து வரும் பெண்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறு கடன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் அன்றாட வியாபாரத்துக்கு தேவையான பணத்தைப் பெற முடியும். குறைந்த வட்டி விகிதம் : இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு ரூ.100 முதல் ரூ.5,000 வரை சிறு கடன் வழங்கப்படுகிறது. மேலும், இந்தக் கடனுக்கு 11 சதவீத வட்டி வசூலிக்கப்படுகிறது. தினசரி வியாபாரத்துக்காக அதிக வட்டிக்கு தனியாரிடம் கடன் வாங்க வேண்டிய நிலையை குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இதையும் படிங்க: மிஸ் பண்ணிட்டாத்தீங்க.... ITI-யில் சேரும் மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! மாதம் ரூ 30,000 சம்பளம்... தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு...!!! பெண்களின் முன்னேற்றம் : குறிப்பாக பூ விற்பனை, காய்கறி விற்பனை, பழ விற்பனை போன்ற சிறு வியாபாரங்களில் ஈடுபடும் பெண்கள் இந்தக் கடனை தங்களது தொழிலுக்கான சுழற்சி மூலதனமாக பயன்படுத்திக் கொள்ளலாம். புதிய பொருட்களை வாங்குவது உள்ளிட்ட அன்றாட வியாபாரச் செலவுகளுக்கு இந்த நிதி உதவியாக இருக்கும். எங்கே பெறுவது? : இந்தக் கடனைப் பெற விரும்பும் பெண்கள் தங்களுக்கு அருகிலுள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளையை அணுகி விவரங்களை தெரிந்துகொள்ளலாம். ஆதார், முகவரி உள்ளிட்ட அடிப்படை ஆவணங்களுடன் வியாபாரம் தொடர்பான விவரங்களையும் வங்கி கேட்கலாம். சிறு வியாபாரம் செய்யும் பெண்களுக்கு இந்தத் தகவல் பயனுள்ளதாக இருக்கலாம் என்பதால், தகுதி உள்ளவர்கள் அருகிலுள்ள கூட்டுறவு வங்கியில் நேரடியாக விசாரித்து விண்ணப்பிக்கும் முறையை தெரிந்துகொள்ளலாம். இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஒவ்வொரு நாளாக நடந்த கொடுமை.. காதலனுக்காக கண்டுகொள்ளாத கொடூர தாய்.!

Tamil Spark14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தமிழக பெண்களுக்கு அரசு அசத்தல் திட்டம்.! பூ, காய்கறி விற்பனை செய்வோருக்காக ரூ.5000 வரை கடன் தரும் அரசு.!
PulseNews சுருக்கம்

பூ, காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வரும் பெண்களுக்கு உதவும் நோக்கில், கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறு கடன் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. தினசரி வியாபாரத்திற்குத் தேவையான மூலதனத்தைப் பெறுவதற்கு இந்தத் திட்டம் பெண்களுக்குப் பெரிதும் துணைபுரிகிறது.

இத்திட்டத்தின் கீழ் தகுதியான பெண்களுக்கு 100 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்தச் சிறு கடன்களுக்கு 11 சதவீத வட்டி வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மூலம்: Tamil SparkTamil Spark-இல் முழு செய்தியைப் படிக்க →
#business