PulseNews
வணிகம்

டெல்டா பாசனத்திற்காக செப்டம்பர் 1 முதல் மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு; முதலமைச்சர் விஜய் திறந்து வைப்பார்: அமைச்சர் ஆனந்த் அறிவிப்பு

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நீரை செப்டம்பர்1ஆம் தேதி முதலமைச்சர் விஜய் திறந்து வைக்க இருப்பதாக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டூர் அணையின் நீர் இருப்பு படிப்படியாக உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டு, குடிநீர் மற்றும் டெல்டா பாசனத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் நீர் திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனப் பணிகளை உடனடியாகத் தொடங்குவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் வேளாண்துறை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். செப்டம்பர் ஒன்று முதல் 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்றும் விவசாயிகள், கிடைக்கும் நீரை சிக்கனமாகவும் திட்டமிட்டும் பயன்படுத்தி, சாகுபடி பணிகளை மேற்கொள்ள அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முறைப்பாசனத்தின் மூலம் கடைமடை வரை நீர் சென்றடைவதை டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஒவ்வொரு துளி நீரிலும் அதிக மகசூல்" கிடைப்பதையும் உறுதி செய்யவும் அமைச்சர் ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

Polimer News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
டெல்டா பாசனத்திற்காக செப்டம்பர் 1 முதல் மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு; முதலமைச்சர் விஜய் திறந்து வைப்பார்: அமைச்சர் ஆனந்த் அறிவிப்பு
PulseNews சுருக்கம்

டெல்டா பாசனத் தேவைக்காக செப்டம்பர் 1-ம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் அறிவித்துள்ளார். இந்த நீர் திறப்பு நிகழ்வை முதலமைச்சர் விஜய் நேரில் தொடங்கி வைக்க உள்ளார்.

மேட்டூர் அணையின் நீர் இருப்பு படிப்படியாக அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளை நிறைவேற்ற அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனப் பணிகளைத் தொடங்குவதற்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business