PulseNews
வணிகம்

அத்துமீறும் அதிகாரிகள்! அலறும் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள்!

நெ ல்லை கோட்டத்தில் வருகிற அரசு போக்குவரத்து கழகத்தின் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட் டங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மாவட்ட அலுவலகங்களில் போக்குவரத்து பணிகளைக் கவனிப்பதற்காக நூற்றுக்கணக்கான அமைச்சுப் பணியாளர்கள் பணியாற்றிவருகின்றனர். தற்போதைய நெல்லை மண்டல பொதுமேலாளராக இருப்பவர் போகன்குமார். தூத்துக்குடி மாவட்ட பொதுமேலாளர் இராமகிருஷ்ணன் ஆகிய அதிகாரிகள் பணியில் இருக்கின்றனர். இவர்களின் உயரதிகாரி நெல்லையிலிருக்கும் எம்.டி. செல்வம் ஆவார். இந்த 3 அதிகாரிகளும் ஒரே சமூகம் சார்ந்தவர்கள். மூவரும் சமூகம் சார்பாக இணைந்தே செயல்படுவார்களாம். அதிகாரிகள் கொடுக்கிற பணிநெருக்கடி தாங்காமல் போக்குவரத்துக் கழக அலுவலகத்தின் பல ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு வேலையைவிட்டுச் செல்கின்றனர். இருக்கிற ஊழியர்களுக்கோ தற்போது அதிகாரிகளால் பணிச்சுமை தரப்பட்டு வருவதால் அவர்களும் வி.ஆர்.எஸ். கொடுத்து விட்டு கிளம்பும்நிலையில் இருப்பதால், நெல்லை கோட்ட கழகத்தில் பல்வேறு முறைகேடுகள், அதிகார அத்துமீறல்கள் நடக்கின்றன என்று போக்குவரத்து ஊழியர்கள் பேசுகிறார்கள். நெல்லை மண்டல அதிகாரிகள், அலுவலக ஊழியர்களில் ஒருவருக்கு 4 பீட் பார்க்கவேண்டுமென்று கடும் நெருக்கடி கொடுக்க... ஏற்கனவே ஒரு பீட் வேலையைக்கூட முழுமை யாகப் பார்க்கமுடியாமல் திணறும் பணியாளர்களால் முடியாமல்போயிருக்கிறது. இதனால் அதிகாரிகளின் நெருக்கடி அதிகமாக, தொந்தரவு தாங்கமாட்டாத பணியாளர்கள் பலர் விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு வெளி யேறுகிறார்கள். இதனால் தற்போது 150 பணியாளர்களே பணியில் இருக்கிறார்கள். அவர்களும் அதிகாரிகளின் டார்ச்சர் பொறுக்கமாட் டாமல் எப்போது வெளியேற லாம் என்று நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதிகாரிகளின் இந்த டார்ச்சர் தாங்க மாட்டாமல் சுரேந்தர் என்ற பணியாளர் மன உளைச்சலில் தின்னரைக் குடித்து தற்கொலைக்கு முயல, அவர் உடனடியாக அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதோடு, தற்போது மேல்சிகிச்சைக்காக தனியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். கிரிட்டிக்கல் கண்டிஷனிலிருக்கும் கடுமை யான சுகர் பேஷன்ட் ஒருவருக்கு, நீங்கள் 3 பீட் பார்க்கவேண்டுமென்று நெருக்கடி கொடுக்கப்பட, அவரால் எப்படி பார்க்கமுடியும் என்று ஆதங்கப் படுகிறார்கள் சக ஊழியர்கள். தற்காலிக நடத்துன ரான தங்கதுரை பணியிலிருக்கும்போதே அவர் அதிகாரிகளின் உத்தரவால் பணிநீக்கம் செய்யப் பட்டு பாதிவழியிலேயே இறக்கிவிடப்பட்டார். இதனால் விரக்தியடைந்த நடத்துனர் தங்கதுரை கலெக்டர் அலுவலக வாசலில் கதறியழ, கலெக்டர் உத்தரவின் பேரில் தங்கதுரை மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதிகாரிகளின் நெருக்கடி தாங்கமாட்டாத பணியாளர்கள் ரிட்டையர்மெண்ட்க்கு 3, 4 வருடங்கள் இருக்கும் நிலையில் வெறுப்பில் வி.ஆர்.எஸ். கொடுத்துவிட்டு வெளியேறிவிடலாம் என அதிகாரிகளிடம் விண்ணப்பம் கொடுத்தால், அதனை ஏற்காத அதிகாரிகள் "நீ உடனடியாக பணிக்கு வரவேண்டும் என்று நெருக்கடி கொடுப்பதால் சிக்கலில் தவிக்கிறார்கள். தூத்துக்குடி அலுவலகத்தில் ஒரு பெண்ணுக்கு உயரதிகாரியால் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட, அந்தப் பெண் விஷமருந்த, அது விபரீதமாகியிருக்கிறது. கடைசி யில் அந்த அதிகாரி தன்னுடைய செலவிலேயே அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை மேற்கொண்ட விஷயமும் வெளியாகி விவகாரமாகியிருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார்கள். இது ஒருபுறமென்றால், பணிமனைகள் மற்றும் போக்குவரத்து அலுவலகங்களில் நடக்கிற ஊழல்கள், முறைகேடுகள் வெளியேதெரியாமல் அதிகாரிகளால் மறைக்கப்படுகின்றன. நெல்லையிலிருந்து இராமநாதபுரம், கமுதி, பரமக்குடி ஆகிய நெடுந் தொலைவுகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கு அங்கேயுள்ள கேஸ் நிரப்பும் மையத்தில் கேஸ் நிரப்புகிறார்கள். ஆனால் அந்த மையங்களில் சம்பந்தப்பட்ட பேருந்துகளுக்கு நிரப்பப்பட்ட கேஸின் அளவையும் அதற்கான தொகையையும் குறிப்பிடாமல் வெற்று பில்லாகவே வாங்கப்பட்டு வருகிறதாம். அந்த பில்கள் நெல்லை அலுவலகம் கொண்டுவரப்பட்டு இஷ்டம்போல் தொகை நிரப்பப்படுகிறது. இதுபோன்ற முறைகேடுகளுக்கு உறுதுணையாக இருப்பவர் அப்பன் என்ற அதிகாரியாம். அவர் மீது வழக்குகளிருந்தும் அவரை முக்கியமான பொறுப்பில் அதிகாரிகளே நியமித்திருப்பதை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள் தொழிலாளர்கள். மேலும், இரண்டு வருடத்திற்கு ஒருமுறை பணிமனையிலுள்ள ஆயில் மற்றும் இரும்புக் கழிவுகள், பிற கழிவுகள் போன்றவை விற்கப்படுவது வழக்கம். இதில் ஒரு லிட்டர் கழிவு ஆயில் விற்கப்பட்டால் 100 மில்லிதான் கணக்கு எழுதப்படுமாம். இப்படி ஆயிரக்கணக்கான லிட்டர் கழிவு ஆயில்கள் வெளியே விற்கப்பட்டதிலும் ஊழல் நடந்திருக்கிறதாம். கடந்த தேர்தல் நேரத்தில் கழிவு ஆயில், கழிவு இரும்புப் பொருட்கள் ரூ.50 லட்சம் வரை விற்கப்பட்டிருக்கிறது. ஆனால் விற்கப்பட்ட கழிவுப் பொருட்களின் மதிப்பு ரூ.2 லட்சம் என்று குறிப்பிடப்பட்டதாக தொழிலாளர் கள் குற்றம்சாட்டுகிறார்கள். இதுகுறித்து விளக்கமறிய நாம் நெல்லை அரசு போ.வ. கழக மேலாளர் எம்.டி. செல்வத்தை தொடர்பு கொண்டு நடந்தவை குறித்து கேட்டபோது "நாம் சொல்வதைக் கேட்டுக்கொண்ட அவர், நான் தற்போதுதான் வந்துள்ளேன். நீங்கள் சொன்ன விவரங்களை விசாரித்துவிட்டு சொல்கிறேன்'' என்று இணைப்பைத் துண்டித்துக்கொண்டார். அப்படி அந்த அதிகாரி விளக்கம் தரும் பட்சத் தில் அதையும் நக்கீரன் பிரசுரம் செய்யத் தயாராகவே இருக்கிறது.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அத்துமீறும் அதிகாரிகள்! அலறும் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள்!
PulseNews சுருக்கம்

நெல்லை மண்டலத்தின் கீழ் செயல்படும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் நூற்றுக்கணக்கான அமைச்சுப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தற்போது நெல்லை மண்டல பொதுமேலாளராக போகன்குமாரும், தூத்துக்குடி மாவட்ட பொதுமேலாளராக இராமகிருஷ்ணனும் பொறுப்பு வகிக்கின்றனர். இவர்களுக்கு மேலான உயர் அதிகாரி நெல்லையில் பணியாற்றி வரும் நிலையில், இந்த அதிகாரிகள் அத்துமீறிச் செயல்படுவதாகக் கூறி போக்குவரத்து கழக ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#business