PulseNews
வணிகம்

மதுரையில் ஆகஸ்ட் 28 அன்று மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.. தவறவிடாதீர்கள் !

வேலைவாய்ப்பு பெறுவதனால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் துணை இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 28.08.2026 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இம்முகாமில் தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித்தகுதிக்கேற்ப வேலைநாடும் இளைஞர்களை நேர்காணல் மூலம் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக் கொள்ளலாம். வேலைநாடுநர்கள் தங்களது சுய விவரங்களை மற்றும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் விவரங்களை http://www.tnprivatejobs.tn.<wbr />gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து இதில் பங்கேற்று பயன் பெறலாம்.

அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்

இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தங்களது சுய விவர குறிப்பு (BIO DATA), கல்விச் சான்றிதழ்களின் நகல், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் 28.08.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மதுரை, கே.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதனால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் துணை இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மதுரையில் ஆகஸ்ட் 28 அன்று மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.. தவறவிடாதீர்கள் !
PulseNews சுருக்கம்

மதுரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளன.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பணி வாய்ப்பினைப் பெறுவதால், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள தங்களின் பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். வேலை தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பினைத் தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business