அண்டை மாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல தடை: தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு எம் சாண்ட், ஜல்லிகற்கள், கருங்கல் ஆகிய கனிமங்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் நடந்த ஆலோசனை தொடர்ந்து அமைச்சர் பிரபு அதிரடி நடவடிக்கையாக தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு சாதாரண கற்கள், ஜல்லி மற்றும் எம்-சாண்ட் (M-Sand) உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதித்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். எல்லையோர மாவட்டங்களில் தீவிரமாக கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி-க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தற்காலிக தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறியுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு மட்டும் இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கனிம வளங்களை பாதுகாக்கவும், மாநிலத்தின் உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கவே இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →