PulseNews
வணிகம்

சொத்து பிரச்னையே இல்லை; அரசியல் நோக்கத்துடன் தொடர்ந்த வழக்கு: மரிய வில்சன் வழக்கறிஞர் பேட்டி

தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு சொத்து தொடர்பான பிரச்னை அல்ல என்றும், அவர் அமைச்சராக இருப்பதால் அரசியல் நோக்கத்துடன் எதிர்தரப்பினர் இந்த வழக்கை பெரிதுபடுத்தி வருவதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத், அவரது மனைவி கரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்‌. இந்த புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், வழக்கு விசாரணைக்கு ஆஜாராக வேண்டும் என்று நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் மரிய வில்சன் தரப்பு வழங்கறிஞர், இந்த வழக்கு முழுக்க முழுக்க குடும்பம் சம்பந்தப்பட்டது. தற்போது மரிய வில்சன் அமைச்சராக இருப்பதால், அவரை மிரட்டும் நோக்கத்திலும், அரசியல் உள்நோக்கத்துடனும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நாங்கள் கருதுகிறோம். இந்த விவகாரம் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்றது. ஆனால், 2022 முதல் 2026 வரை எதிர்தரப்பினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்த வழக்கு தொடரப்பட்டிருப்பதன் பின்னணியில் வேறு ஏதோ ஒரு நோக்கம் இருப்பதாக எங்களுக்கு சந்தேகம் உள்ளது. இந்த வழக்கு சொத்து தகராறு தொடர்பானது அல்ல. குழந்தையை தத்தெடுத்தது தொடர்பான விவகாரமே இந்த வழக்கின் மையம். தத்தெடுப்பு தொடர்பான நடைமுறையின்போது அதிகாரிகள் குழந்தையை விசாரிக்க வந்த நிலையில், குழந்தை எங்களிடமிருந்து பிரிக்கப்பட்டது. சுமார் இரண்டு அல்லது மூன்று நாட்கள் குழந்தை எங்கு இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாத சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் குழந்தையை மீண்டும் எங்களிடம் அழைத்து வந்தபோதுதான் இந்த விவகாரம் தொடர்பான பிரச்னைகள் ஏற்பட்டன. எதிர்தரப்பினர் பணம் பறிக்கும் நோக்கத்துடன் இந்த வழக்கை நடத்தி வருகின்றனர். எதிர்தரப்பினர் மீது ஏற்கனவே மூன்று வழக்குகள் உள்ளன. அவர்களுக்கு எதிராக சி.பி.சி.ஐ.டி வழக்குகளும் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம். எனவே, அவர்கள் இந்த விவகாரத்தில் முழுமையாக குற்றச்சாட்டுகளற்ற நிலையில் இல்லை. குழந்தை தத்தெடுப்பு விவகாரத்தை பயன்படுத்தி எங்கள் கட்சிக்காரரை பணம் கொடுக்கும்படி வற்புறுத்துவதும், பிளாக்மெயில் செய்வதுமான முயற்சி நடைபெறுகிறது என்பதுதான் எங்களது தரப்பு வாதம்.. இந்த வழக்கு தொடர்பாக சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் ஒவ்வொரு முறையும் எதிர்தரப்பினர் வெவ்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததால் உடன்பாடு ஏற்படவில்லை. ஏற்கனவே குடும்பச் செலவுகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்துள்ளோம். இருப்பினும், ஒவ்வொரு மீடியேஷன் நடவடிக்கையிலும் எதிர்தரப்பினர் புதிய கோரிக்கைகளை முன்வைத்தனர். அவர்களின் கோரிக்கைகள் ஒவ்வொரு முறையும் மாறுபட்டதால், அவற்றை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் மீடியேஷன் மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை. எனவே, வழக்கை வாபஸ் பெற்றுள்ளோம். புதிய குற்றப்பத்திரிகை உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, எதிர்தரப்பினருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் நோக்கமும் எங்களுக்கு உள்ளது. மேலும், “இந்த வழக்கில் நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு நியாயத்தையும் முழுமையாக எடுத்துரைத்துள்ளோம். குழந்தை எங்களிடமிருந்து பிரிக்கப்பட்டு சுமார் மூன்று நாட்கள் வேறு இடத்தில் வைத்திருந்ததாகவும், அந்தக் காலகட்டத்தில் குழந்தையை எங்களால் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளோம். எதிர்தரப்பினர் மீது உள்ள வழக்குகள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்தும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம். ஆனால், ஊடகங்களில் எங்கள் தரப்பு வாதங்களை முழுமையாக வெளியிடாமல், நீதிபதி கூறிய கருத்துகள் மட்டுமே பெரிதாக வெளியிடப்படுகின்றன. எங்கள் தரப்பு நியாயத்தையும் ஊடகங்கள் கேட்டறிந்து வெளியிட வேண்டும்.இந்த விவகாரத்தில் சொத்து தகராறு எதுவும் இல்லை என்பதை, “இது சொத்து பிரச்னையே கிடையாது. குழந்தை தத்தெடுப்பு தொடர்பான விவகாரம்தான். ”இந்த வழக்கு சொத்து பிரச்னையே இல்லை.. இவர் அமைச்சராக இருப்பதால் அரசியல் நோக்கத்தோடு அவரது சகோதரர் பெரிது படுத்துகிறார்” - அமைச்சர் மரிய வில்சன் வழக்கறிஞர் பேட்டி #MarieWilson #Minister #TvkMinister #MarieWilsonCase pic.twitter.com/c3r7bh9qwF — PttvOnlinenews (@PttvNewsX) August 28, 2026 குழந்தை தத்தெடுப்பு தொடர்பான அமைப்பு மற்றும் நடைமுறைகள் குறித்துதான் இந்த பிரச்னை எழுந்துள்ளது. எங்களுடைய தரப்பில் குழந்தையை தத்தெடுத்தது தொடர்பான விவரங்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களுடைய தரப்பில் உள்ள அறக்கட்டளையில் எதிர்தரப்பினர் சேர வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், அந்த கோரிக்கையை நாங்கள் ஏற்கவில்லை. இதன் காரணமாகவே தற்போது இந்த விவகாரம் பெரிதுபடுத்தப்பட்டு வருவதாக எங்கள் தரப்பு கருதுகிறது என்று கூறியுள்ளார்.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சொத்து பிரச்னையே இல்லை; அரசியல் நோக்கத்துடன் தொடர்ந்த வழக்கு: மரிய வில்சன் வழக்கறிஞர் பேட்டி
PulseNews சுருக்கம்

தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு சொத்து விவகாரம் சார்ந்தது அல்ல என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அவர் அமைச்சராக இருப்பதைக் கருத்தில் கொண்டு, அரசியல் உள்நோக்கத்துடன் எதிர்தரப்பினர் இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி, புதுச்சேரி எழில் நகரில் வசிக்கும் தனது சகோதரர் மரிய குலோத் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரையையும் அவரது மனைவி கரோலினையும் தாக்கியதாக அமைச்சர் மரிய வில்சன் மீது லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business