PulseNews
வணிகம்

TVK Budget: விஜய் அரசின் முதல் பட்ஜெட்.. தவெக நிதிநிலை அறிக்கையில் வெளியாகும் அறிவிப்புகள் என்னென்ன?

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியமைத்துள்ளது. தவெக அரசின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ள நிலையில், தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

தவெக அரசின் பட்ஜெட்:

விஜய் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் என்பதாலும், அரைநூற்றாண்டுகளுக்கு பிறகு திமுக மற்றும் அதிமுக இல்லாத கட்சி ஒன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. இந்த பட்ஜெட்டைத் தயாரிப்பதற்கு நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு பல்வேறு ஆலோசனைகளை முதலமைச்சர் விஜய் வழங்கியுள்ளார்.

சிறப்புகள் என்னென்ன?

முதலமைச்சர் விஜய் அரசின் முதல் பட்ஜெட் அறிக்கையில் என்னென்ன சிறப்பம்சங்கள் இடம்பெற உள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

1. இந்த பட்ஜெட் அறம், பொருள், இன்பம் என்ற பெயரில் 2026-27 நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

2. அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தருவதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

3. முதியோர் உதவித்தொகையை அதிகரித்து வழங்கும் அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என்று கருதப்படுகிறது.

4. பாரம்பரிய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம் வாக்குறுதிகளை அளித்து ஆட்சியைப் பிடித்த தவெக-வின் பட்ஜெட்டில் பெண்களுக்கு முக்கியத்தவம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

5. பெண்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் பெண்கள் தன்னிறைவுக்கான சிறப்பு தொழிற்பேட்டைகள் திட்டம் அறிவிப்பு வெளியாக உள்ளது.

6.பெண்களுக்கு எதிராக குற்றங்களை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு

7.காமராஜர் பெயரில் சிறப்பு பள்ளிகள் தொடங்க திட்டம்

8. அரசுப்பள்ளிகளை நவீனமயமாக்கும், தரத்தை மேம்படுத்தும் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

9. மொழிப்போர் தியாகிகளுக்கு அருங்காட்சியகம், பட்டா முறைப்படுத்துதல் போன்ற புதிய திட்டங்களை செயல்படுத்த முடிவு

இதுபோன்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தியாவசியத்திற்கு முக்கியத்துவம்:

கடந்த கால அரசுகளின் பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முறையாக செலவு செய்யாமல் இருந்தது போல இல்லாமல், உரிய திட்டங்களுக்கு மட்டும் முக்கியத்துவமும், முன்னுரிமையும் அளிக்க தவெக அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல, தமிழ்நாட்டின் நிதிநிலை மோசமாக உள்ள சூழலில், தவெக அரசு அத்தியாவசியமான, முக்கியமான திட்டங்களுக்கு மட்டும் முதன்மையாக செலவு செய்ய முடிவு செய்துள்ளது.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
TVK Budget: விஜய் அரசின் முதல் பட்ஜெட்.. தவெக நிதிநிலை அறிக்கையில் வெளியாகும் அறிவிப்புகள் என்னென்ன?

தமிழகத்தில் தவெக ஆட்சியின் முதல் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், 5 லட்சம் வீடுகள், பெண்கள் முன்னேற்றம், கல்வி மேம்பாடு மற்றும் காமராஜர் பெயரில் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து அறம், பொருள், இன்பம் என்ற பெயரில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

மூலம்: Abp News
#business