“நீங்களே பதில் சொல்லிட்டா நாங்க எதுக்கு?” - பேரவையில் கோபப்பட்ட உதயநிதி!
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், துறைகள் ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (27-08-26) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதித்துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெறவுள்ளது. முன்னதாக அவை கூடியதும் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டு எம்.எல்.ஏக்களின் கேள்விகளுக்கும் கோரிக்கைகளுக்கும் துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இதனிடையே பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், நேபாளம் வெள்ளம் சம்பவம் குறித்து பேசத் தொடங்கினார். அப்போது நேபாளம் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களின் நிலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரும் முன்பே அமைச்சர் ராஜ்மோகன் அது குறித்து பேசுவதாக திமுக, அதிமுக, பா.ம.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவையில் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்டவர்களை அமறுமாறு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தொடர்ந்து கூறியும் அவர்கள் இருக்கையில் அமராமல் தொடர்ந்து கூச்சலிட்டனர். ஒரு கட்டத்தில் கோபப்பட்ட சபாநாயகர், “நாட்டையே உலுக்கிய சம்பவம் என்று அமைச்சர் கருத்து சொன்ன பிறகும், உங்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்க வாய்ப்பளிக்க தான் போகிறேன். இந்த பிரச்சனையில் அனைத்து கட்சிகளும் அக்கறையோடு இருப்பதாக காட்டுவதற்கு தான் இதை பேசுகிறோம். இதில் அமைச்சர் பேசிய பிறகு நீங்கள் பேசினால் என்ன? பின்னாடி பேசினால் என்ன?. கரூர் சம்பவம் நடந்த போன்று முன்னாள் முதல்வர் தான் முதலில் பேசினார். அதன் பிறகு தான் நீங்கள் வினாக்களை வைத்தீர்கள். அந்த சம்பவம் நடக்கிற நீங்கள் அனுமதித்தீர்கள், இதை ஏன் அனுமதிக்க முடியாது? மக்கள் பிரச்சனையில் எல்லோரும் அக்கறையாக தான் இருக்கிறோம்” என்று தெரிவித்தார். இதையடுத்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “நாங்கள் அரசை குறை கூற விரும்பவில்லை. இதை அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வருகிறோம். அதற்கு பிறகு நீங்கள் பதில் சொல்லுங்க... நாங்கள் கவனத்துக்கே கொண்டு வராமல் நீங்களே பதில் சொல்லிவிட்டால் நாங்கள் எதுக்கு சட்டமன்றத்துக்கு வர வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, இன்று (27-08-26) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சமூகநீதித்துறை மீதான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதங்கள் நடைபெறுகின்றன. அவை கூடியதும் கேள்வி நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர்.
இந்தச் சூழலில், பள்ளிக்கல்வித் துறை தொடர்பான நிகழ்வு ஒன்றின்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் "நீங்களே பதில் சொல்லிவிட்டால் பிறகு நாங்கள் எதற்காக இருக்கிறோம்?" என்று கேள்வி எழுப்பி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது அவையில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.