PulseNews
வணிகம்

TN Assembly Live Updates: தமிழக சட்டசபை கூட்டம் - இன்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி தொடங்கியது. இதில் முதல் நாளில், நிதியமைச்சர் மரிய வில்சன், பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 6-ந் தேதி வேளாண் அமைச்சர் வினோத், வேளாண் துறைக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 7-ந் தேதி பட்ஜெட் மீதூன விவாதங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 17) தொடங்கிய மானியக் கோரிக்கை தொடர்பான நிகழ்வில், மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் அருண்ராஜ் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தனர். அதேபோல் நேற்று பொதுப்பணித்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் மானியக் கோரிக்கை வெளியிடப்பட்டது. பொதுப்பணி துறை திட்டங்களைக் கண்காணிக்க புதிய செயலி - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுப்பணித்துறை திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரக்கட்டுப்பாட்டை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடும் வகையிலும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையிலும் புதிய 'TN.PWD' செயலி உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார் முதல்வர் நடவடிக்கை எடுக்கிறார் - செங்கோட்டையன் பதில் பாலியல் குற்றங்கள் நடந்தால் சட்டத்தின் அடிப்படையில் தமிழக முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்கிறார். பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் நிரந்தர தீர்வு தேவை! என தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா ஆவேசமாக பேசிய நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
TN Assembly Live Updates: தமிழக சட்டசபை கூட்டம் - இன்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை
PulseNews சுருக்கம்

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் பொது பட்ஜெட்டையும், மறுநாள் வேளாண் பட்ஜெட்டையும் முறையே நிதியமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் தாக்கல் செய்தனர். தொடர்ந்து ஆகஸ்ட் 7-ம் தேதி பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடங்கின. அதன் ஒரு பகுதியாக, அமைச்சர் அருண்ராஜ் மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்பான மானியக் கோரிக்கைகளை முன்வைத்தார். இந்நிலையில், இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகளில் நீர்வளத்துறைக்கான மானியக் கோரிக்கைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business