PulseNews
வணிகம்

செப்.18 முதல் அமெரிக்க கிரீன் கார்டு விதிகளில் கூடுதல் மாற்றம்: இந்தியர்களுக்கு ஏற்படும் தாக்கம் என்ன?

அமெரிக்காவில் சட்டப்பூர்வ நிரந்தரக் குடியுரிமைக்கு (Lawful Permanent Residence) விண்ணப்பிக்கும் வெளிநாட்டினர், எதிர்காலத்தில் அரசின் நலத்திட்டங்களைச் சார்ந்திருக்கும் ‘பப்ளிக் சார்ஜ்’ நபராக மாறுவார்களா என்பதைத் தீர்மானிப்பதற்கான புதிய வழிகாட்டுதல்கள் அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு (USCIS) வெளியிட்டுள்ளது. பைடன் நிர்வாகத்தின் விதிமுறைகளை மாற்றி, டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்துள்ள புதிய நடைமுறை ஒவ்வொரு விண்ணப்பதாரரின் சூழலையும் தனித்தனியாக விரிவாக ஆய்வு செய்ய வழிவகை செய்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் சுயசார்புடன் இருக்க வேண்டும்; வரி செலுத்துவோரின் நிதியில் இயங்கும் அரசின் நலத்திட்ட உதவிகளைச் சார்ந்து இருக்கக் கூடாது என்ற நாடாளுமன்றத்தின் நோக்கத்திற்கு ஏற்ப விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பால் இறுதி செய்யப்பட்டுள்ள இந்த புதிய விதிகள் வரும் செப்டம்பர் 18 முதல் நடைமுறைக்கு வருகின்றன. பப்ளிக் சார்ஜ் வரம்பிற்குள் வரும் பிரிவுகளின் கீழ் நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்கு இந்த மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க செப்.18 முதல் என்னென்ன மாற்றங்கள் அமலாகின்றன? உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) 2022-ஆம் ஆண்டு கொண்டுவந்த பப்ளிக் சார்ஜ் விதிமுறைகளை ரத்து செய்ததைத் தொடர்ந்து, இந்த புதிய கொள்கை வழிகாட்டுதலை அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு வெளியிட்டுள்ளது. போதிய நிதி ஆதரவு உறுதிமொழி ஆவணம் (Affidavit of Support) இல்லாததைத் தவிர, வேறு எந்தவொரு ஒற்றைக் காரணியும் ஒரு விண்ணப்பதாரரைப் பப்ளிக் சார்ஜ் ஆகத் தீர்மானிக்காது. இருப்பினும், செப்டம்பர் 18 முதல் பின்வரும் அம்சங்கள் கணக்கில் கொள்ளப்படும் என அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது: வாழ்வாதாரப் பராமரிப்புக்கான நேரடிப் பண உதவி, வீட்டு வசதி உதவி, உணவு முத்திரைகள் (Food Stamps), கல்லூரிப் படிப்புக்கான நிதியுதவி அல்லது பிற நலத்திட்ட உதவிகளைப் பெறுவது பப்ளிக் சார்ஜ் பரிசீலனையில் எடுத்துக்கொள்ளப்படலாம். வருமான வரம்பிற்கு உட்பட்ட இத்தகைய அரசு உதவிகளுக்கு விண்ணப்பிப்பது, ஒப்புதல் பெறுவது அல்லது சான்றிதழ் பெறுவதும் கூட பப்ளிக் சார்ஜ் ஆகக் கருதப்படலாம். விலக்கு அளிக்கப்பட்ட பிரிவுகளைத் தவிர்த்து, அமெரிக்காவில் சட்டப்பூர்வ நிரந்தரக் குடியுரிமை அந்தஸ்தைப் பெற விண்ணப்பிக்கும் அனைவரும் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. குடும்ப அடிப்படையிலான குடியேறிகள்: அமெரிக்கக் குடிமக்களின் வாழ்க்கைத் துணை, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள், அமெரிக்கக் குடிமக்களின் திருமணமாகாத மகன்கள், மகள்கள், அவர்களது குழந்தைகள், நிரந்தரக் குடியுரிமை (LPR) பெற்றவர்களின் வாழ்க்கைத் துணை, குழந்தைகள் மற்றும் திருமணமாகாத மகன்கள்/மகள்கள், அமெரிக்கக் குடிமக்களின் திருமணமான மகன்கள், மகள்கள், அவர்களது வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகள், அமெரிக்கக் குடிமக்களின் சகோதர, சகோதரிகள், அமெரிக்கக் குடிமக்களைத் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டவர்கள் (Fiancé/e), அமெரிக்கக் குடிமக்களின் விதவைகள் / விதவையர்கள் வேலைவாய்ப்பு அடிப்படையிலான குடியேறிகள்: முன்னுரிமைப் பணியாளர்கள் (Priority workers), உயர்கல்வித் தகுதி பெற்ற நிபுணர்கள் அல்லது விதிவிலக்கான திறமைகளைக் கொண்ட வெளிநாட்டினர், திறமையான பணியாளர்கள், தொழில்முறை வல்லுநர்கள் மற்றும் இதர தொழிலாளர்கள், வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க அரசு அலுவலகங்களின் சில தற்போதைய அல்லது முன்னாள் ஊழியர்கள், பனாமா கால்வாய் மண்டலப் பணியாளர்கள், வெளிநாட்டு மருத்துவ கல்லூரி பட்டதாரிகள், சர்வதேச அமைப்புகளிலிருந்து ஓய்வுபெற்ற பணியாளர்கள், சர்வதேச ஊடகவியலாளர்கள் / ஒலிபரப்பாளர்கள், பல் வகைமை விசா (Diversity visa) மூலம் குடியேறுபவர்கள் யாருக்கெல்லாம் விலக்கு உண்டு? அரசியல் புகலிடம் கோரியவர்கள் (Asylees) மற்றும் அகதிகள் (Refugees), அனுமதியின் போது உள்ள அமெரிக்க-ஆசிய (Amerasian) குடியேறிகள், சிறப்பு இளம் குடியேறிகள் (Special immigrant juveniles), பதிவேட்டு விண்ணப்பதாரர்கள் (Applicants for registry), தற்காலிகப் பாதுகாப்பு அந்தஸ்து (TPS) கோரும் விண்ணப்பதாரர்கள், மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் (T விசா பெற்றவர்கள்), குறிப்பிட்ட குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் (U விசா பெற்றவர்கள்), கனடாவில் பிறந்த அமெரிக்கப் பூர்வகுடிகள் (அமெரிக்கக் குடிமக்களாக இல்லாதவர்கள்) பப்ளிக் சார்ஜ்-ஐத் தீர்மானிக்கும் 5 காரணிகள் ஒரு விண்ணப்பதாரர் பப்ளிக் சார்ஜ் வரம்பிற்குள் வருகிறாரா என்பதைத் தீர்மானிக்க USCIS அதிகாரிகள் சட்டம் வகுத்துள்ள 5 முக்கிய காரணிகளை ஆய்வு செய்வார்கள். வயது, உடல்நலம், குடும்ப நிலை, சொத்துகள், வளங்கள் மற்றும் நிதி நிலைமை, கல்வி மற்றும் பணித் திறன்கள்

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
செப்.18 முதல் அமெரிக்க கிரீன் கார்டு விதிகளில் கூடுதல் மாற்றம்: இந்தியர்களுக்கு ஏற்படும் தாக்கம் என்ன?
PulseNews சுருக்கம்

அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்கள், எதிர்காலத்தில் அரசின் நலத்திட்டங்களைச் சார்ந்திருக்கும் ‘பப்ளிக் சார்ஜ்’ நபராக மாற வாய்ப்புள்ளதா என்பதைத் தீர்மானிக்க புதிய வழிகாட்டுதல்களை அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த மாற்றங்கள் வரும் செப்டம்பர் 18 முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.

முந்தைய பைடன் நிர்வாகத்தின் விதிமுறைகளை மாற்றி, டிரம்ப் நிர்வாகம் இந்த புதிய நடைமுறையைக் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், ஒவ்வொரு விண்ணப்பதாரரின் தற்போதைய சூழ்நிலையையும் தனித்தனியாக விரிவாக ஆய்வு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business