PulseNews
வணிகம்

சன்னி லியோனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

மும்பையைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் ஸ்ரீநாராயணன் என்பவர் 2024ஆம் ஆண்டு சன்னி லியோன், அவரது கணவர் டேனியல் வெபர் மற்றும் மேலாளர் சன்னி ரஜானி ஆகியோருக்கு எதிராக அந்தேரியில் உள்ள நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த புகாரில், ‘சன்னி லியோனுக்கு ஒரு தெலுங்கு படத்தில் எனது முயற்சியால் வாய்ப்பை பெற்றுத்தந்தேன். இதற்காக சன்னி லியோனுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் ரூ. 1.75 கோடி தொகை மற்றும் 10 சதவீதம் கமிஷனாக தர வேண்டும் என பேசப்பட்டது. இதற்கு ஒப்புகொண்ட அவர்கள் ஒரு பகுதியை மட்டுமே கொடுத்தனர். மீதித் தொகையைத் தராமல் மறுக்கின்றனர். இப்படி மோசடி, நம்பிக்கை மீறல் மற்றும் மிரட்டல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இதனை விசாரித்த அந்தேரி நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை என மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் ஓம்பிரகாஷ் மும்பை திண்டோஷி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி பி.ஏ. சானே முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் முன்பு விசாரித்த நீதிபதி இந்த விஷயத்தில் உரிய கவனம் செலுத்தவில்லை என்றும் மோசடி மற்றும் நம்பிக்கை மீறலை வெளிப்படுத்தும் ஆதாரங்கள் இருந்தபோதிலும் புகாரை நிராகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. சன்னி லியோன் தரப்பில் புகாரில் சொல்லப்பட்ட குற்றத்திற்கான சான்றுகள் எதுவும் இல்லை என வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கு வெறும் ஒப்பந்த மீறலே தவிர மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களே இல்லை எனத் தெரிவித்து அந்தேரி நீதிமன்றம் வழங்கிய ரத்து உத்தரவை உறுதி செய்து இந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சன்னி லியோனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!
PulseNews சுருக்கம்

மும்பையைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் ஸ்ரீநாராயணன் என்பவர், நடிகை சன்னி லியோன், அவரது கணவர் டேனியல் வெபர் மற்றும் மேலாளர் சன்னி ரஜானி ஆகியோருக்கு எதிராக 2024-ஆம் ஆண்டு அந்தேரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் சன்னி லியோனுக்கு வாய்ப்பு பெற்றுத் தந்ததற்காக, ஒப்பந்தப்படி தர வேண்டிய ரூ. 1.75 கோடி மற்றும் 10 சதவீத கமிஷன் தொகையில் ஒரு பகுதியை மட்டுமே வழங்கியதாக அவர் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், சன்னி லியோனுக்கு எதிராகத் தொடரப்பட்ட அந்த வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#business